கடுமையான (acute) இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு கார்டிகோஸ்டெராய்டுகளால் நன்மை ஏற்படும் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. மூளைக்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்த நாள அடைப்பால் ஏற்படும் பக்கவாதத்தில் அந்நாளம் ரத்தம் பாய்ச்சும் மூளைப் பகுதிகள் வீங்கி விடுகின்றன. இந்த வீக்கம் அது உள்ள இடத்தில் அழுத்தத்தை உண்டாக்கி கூடுதலாக, பிற மூளை உயிரணுக்களையும் அழிகின்றது; அல்லது அவ்வுயிரணுக்களின் குணமடைதலை தாமதிக்கின்றது. இந்த வீக்கம் குறைந்தால் அருகில் உள்ள மூளையின் மீது அது ஏற்படுத்திய அழுத்தம் குறைகின்றது; மற்றும் மூளை உயிரணுக்கள் இழப்பையும் குறைத்து பாதிக்கப்பட்ட உயிரணுக்கள் குணமடையவும் உதவுகின்றது. இந்த மூளை வீக்கம் ஏற்படுத்தும் சேதத்தை கட்டுபடுத்தவும் குணமடைதலை வேகப்படுத்தவும் கார்டிகோச்டெரொட் உபயோகப்படுத்தபடுகிறது. இருப்பினும் 466 பேர் பங்கு கொண்ட 8 ஆய்வுகள் கொண்ட இந்த திறனாய்வு பக்கவாதத்தால் இறப்பவர் எண்ணிக்கையைக் குறைக்கவும், பக்கவாதம் பாதிக்கபட்டு வாழ்பவர்களின் இயல்பான செயல்பாடுகளை முன்னேற்றவும் கார்டிகோஸ்டெராய்டு உதவவில்லை என்று கூறுகின்றன.
மொழிபெயர்ப்பு: ஹரிகணேஷ் ச மற்றும் சி.இ.ப.ஏன்.அர். குழு