திறனாய்வு கேள்வி
பருப்புகளை உண்ணுதல் இதயத்தமனி நோயை தடுக்க முடியுமா அல்லது முடியாதா என்ற கேள்விக்கு இந்த காக்ரேன் திறனாய்வு பதில் அளிக்க முயற்சிக்கிறது.
பின்புலம்
இதயத்தமனி நோய்கள் என்பது, இதயம் மற்றும் இரத்த குழாய்களை பாதிக்கும் நிலைமைகளின் ஒரு குழுவாகும். இவை, உலகம் முழுவதும் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளன. நாம் உண்ணும் உணவு, இதயத்தமனி நோய் பெறுவதற்கான ஆபத்தை பாதிக்கக் கூடும். தவறாமல், மற்றும் ஒப்பீட்டளவில் அதிக அளவு (50 கிராம் முதல் 100கிராம்) பருப்புகளை உட்கொண்டால், மொத்த கொழுப்பின் அளவு மற்றும் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (லோ டென்சிட்டி லிப்போப்ரோடீன், எல்டிஎல்) கொழுப்பு (கெட்ட கொழுப்பு) ஆகியவற்றை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆய்வு பண்புகள்
குறைந்தது 12 வாரங்கள் வரை நீடித்த சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை இந்த திறனாய்வு கொண்டுள்ளது. பங்கேற்பாளர்கள், சராசரியாக 37 முதல் 54 வயதை உடையவர்களாய் இருந்தனர். இந்த ஆதாரம் 30 ஜூலை 2015 வரை தற்போதையது.
முக்கிய முடிவுகள்
நாங்கள் ஐந்து சோதனைகளை (435 பங்கேற்பாளர்கள்) உள்ளடக்கினோம் ,அதில் ஒன்று, இரு சிகிச்சை கிளைகளை பெற்றிருந்தது. அனைந்து ஐந்து சோதனைகளும், பருப்புகளை உட்கொள்வதின் பயனை ஆய்வு செய்தன. அதிகமான பருப்புகளை உட்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை அளிப்பதின் விளைவை ஆராயும் எந்த ஒரு ஆய்வும் கண்டுபிடிக்கப்படவில்லை. இறப்புகளைக் குறித்தோ அல்லது இதயத்தமனி நிகழ்வுகளை குறித்தோ எந்த ஆய்வுகளும் அறிக்கையிடவில்லை. எந்த முடிவுகளும், மொத்த கொழுப்பு நிலைகள் மற்றும் இரத்த அழுத்தம் மீதான ஒரு தெளிவான விளைவுகளை காட்டவில்லை. ஒரு ஆய்வு, பருப்புகள் சார்ந்த ஒவ்வாமையை ஒரு சம்பவத்தில் அறிக்கை செய்தது. பருப்புகளை அதிக அளவில் உட்கொள்வதால் குறிப்பிடத்தக்க அளவு எடை அதிகரிப்பு இல்லை என மூன்று ஆய்வுகள் அறிக்கை செய்தன. வேறு எந்த பாதகமான நிகழ்வுகளும் அறிவிக்கப்படவில்லை.
சான்றின் தரம்
சேர்க்கப்பட்டுள்ள அனைத்து சோதனைகளும் 60 முதல் 100 பங்கேற்பாளர்கள் கொண்ட சிறிய ஆய்வுகளாகவும், மற்றும் உயர்ந்த அளவிலான மாறுபாடுகளை (வேறுபாட் டுத்தன்மை) உடையவையாகவும் இருக்கின்றன. எனவே, முடிவுகளை எச்சரிக்கையுடன் பொருள் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக, சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகள், தெளிவற்ற ஒருதலைச் சார்பிற்கான அபாயத்தில் இருக்கின்றன என நாங்கள் கருதுகிறோம்.
மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.