கர்ப்பக் காலத்தில் நெஞ்செரிச்சலிற்கான சிகிச்சை தலையீடுகள்

பிரச்னை என்ன?

கர்ப்பக் காலத்தில் நெஞ்செரிச்சல் நிவாரணத்திற்கான சிகிச்சை தலையீடுகளின் திறனை மதிப்பிட இந்த திறனாய்வு நோக்கம் கொண்டுள்ளது. உணவு முறை பற்றிய அறிவுரை, வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள் மற்றும் குறைநிரப்பு சிகிச்சைகள் ஆகியவை சிகிச்சை தலையீடுகளில் அடங்கும்.

இது ஏன் முக்கியமானது?

தொண்டை உட்பட உணவு குழாயின் மேற்பகுதியில் ஏற்படும் எரிச்சல் உணர்ச்சியே நெஞ்செரிச்சல் ஆகும். கர்ப்பிணி பெண்களில், இது மிக பொதுவான குடல் அறிகுறிகளில் ஒன்றாகும், மற்றும் கர்ப்பக் காலத்தில் எந்த நேரத்திலும் இது ஏற்படலாம். இது, வயிற்றில் உணவை தக்க வைக்கும் தசைகளை பாதிக்கின்ற மற்றும் வயிற்றிலிந்து அமிலம் தொண்டைக்கு வர செய்கின்ற கர்ப்பக் கால ஹார்மோன்களால் ஏற்படுகிறது. அறிகுறிகள் அடிக்கடி ஏற்பட்டு, கடுமையானதாக மற்றும் வேதனையானதாக ஏற்படலாம், ஆனால் ஆபத்தான பக்க விளைவுகள் மிகவும் அரிதாகும். அநேக சிகிச்சை தலையீடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. லேசான அறிகுறிகளுக்கு, வாழ்க்கை முறை மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. சின்ன அளவில் உணவுகள் உண்ணுதல், சுவிங் கும் மெல்லுதல், இரவில் தாமதமாக உண்ணாதிருத்தல், படுக்கையின் தலை பகுதியை உயர்த்துதல், மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுத்தும் உணவுகள் மற்றும் மருந்துகளை தவிர்த்தல் ஆகியவற்றால் பெண்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மது மற்றும் புகையிலையை தவிர்த்தல், எதிர்பாயல் அறிகுறிகளை குறைக்கவும், மற்றும் குழந்தையை இந்த தீங்கான பொருள்களுக்கு வெளிப்படுத்துவதை தவிர்க்கவும் ஊக்கபடுத்தப்படுகிறது. மிக அதிக எதிர்பாயல் அறிகுறிகளுக்கு, சில சமயங்களில் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. கர்ப்பக் கால நெஞ்செரிச்சலின் சிகிச்சைக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்துகளில், அமில எதிர்ப்பிகள், மற்றும் வயிற்றில் அதிக நேரம் அமிலங்கள் தங்குவதை தடுப்பதற்கு வயிறு-குடல் குழாயின் தசைகளை தூண்டும் மருந்துகள் ஆகியவை அடங்கும்.

நாங்கள் கண்ட ஆதாரம் என்ன?

358 பெண்கள் மேல் தரவினை அளித்த நான்கு சிறிய சோதனைகளை நாங்கள் கண்டோம். அவர்கள் சிகிச்சை குழுவிலோ அல்லது கட்டுப்பாட்டு (போலி சிகிச்சை) குழுவிலோ இருந்தார்கள் என்பதை பொறுத்த வரை, சேர்க்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு குறைந்த ஒரு தலை சார்பு அபாயம் இருந்தது என்று நாங்கள் மதிப்பிட்டோம். எவ்வாறு பெண்கள் சிகிச்சை அல்லது கட்டுப்பாட்டு/ போலி சிகிச்சை குழுக்களில் இருப்பதற்கு முடிவுகள் எடுக்கப்பட்டது, முடிவுகளை பார்க்கின்றவர்களுக்கு, மற்றும் அனைத்து முடிவுகளும் அறிக்கையிடப்பட்டனவா என்பது போன்றவற்றுக்கு ஒரு தலை சார்பு அபாயத்தை பற்றி தெளிவாக இல்லை.

இரண்டு சோதனைகள், மருந்தை போலி சிகிச்சையோடு அல்லது சிகிச்சையின்மையோடு ஒப்பிட்டதை கண்டது. ஒரு ஆய்வு, மருந்தின் (சுகரல்ப்ட்) திறனை உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை தேர்வினோடு ஒப்பிட்டதை ஆராய்ந்தது. ஒரு சோதனை, அக்குபங்சருக்கு எதிராக சிகிச்சையின்மையை ஆராய்ந்தது.

சிகிச்சை பெறாத அல்லது போலி சிகிச்சை பெற்ற பெண்கள் அல்லது உணவு முறை மற்றும் வாழ்க்கைமுறை தேர்வுகள் குறித்த அறிவுரை பெற்ற பெண்களை விட, மிக அதிகமாக, மருந்து பெற்ற பெண்கள், நெஞ்செரிச்சலில் இருந்து முழுமையான நிவாரணம் பெற்றதாக கூறினர்.(மிதமான தர ஆதாரம்)சிகிச்சை குழுக்களிடையே, நெஞ்செரிச்சலிருந்து அரைகுறையான நிவாரணம் அல்லது பக்க விளைவுகளிடையே எந்த வித்தியாசத்தையும் நாங்கள் காணவில்லை.(மிக குறைந்த தர ஆதாரம்)அக்குபங்சர் பெறாத பெண்களை ஒப்பிடும் போது, அக்குபங்சர் பெற்ற பெண்கள் மேம்பட்ட தூக்கம் மற்றும் உண்ணுதல் போன்ற மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை அறிக்கையிட்டனர், மற்றும் பக்க விளைவுகள் வீதம் எந்த வித்தியாசமும் இல்லை.

இதற்கு என்ன அர்த்தம்?

இருக்கும் சிறிய ஆதாரத்திலிருந்து, மருந்து, நெஞ்செரிச்சலிருந்து நிவாரணம் அளிக்கிறது என்று தெரிகிறது, ஆனால் எந்த மருந்து சிறந்தது என்று சொல்ல போதுமான தரவு இல்லை. நெஞ்செரிச்சலால் அவதிப்படுகிற பெண்களில், சிறப்பாக உண்ணவும் மற்றும் உறங்கவும் அக்குபங்சர் உதவுகிறது என்று தெரிகிறது.

கர்ப்பக் காலத்தில் நெஞ்செரிச்சலிற்கான சிகிச்சை தலையீடுகளின் திறனை ஆராய மேற்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது. கர்ப்பக் கால நெஞ்செரிச்சல் சிகிச்சையில், ஹிஸ்டமின் 2-ரிசெப்டார் ஆண்டகோனிஸ்ட், ப்ரோமொடிலிடி மருந்துகள், ப்ரோடான் பம்ப் இன்ஹபிடார்கள் மற்றும் ஒரு மிதவை-ஏற்படுத்தும் அல்கிநேட் ரெப்லக்ஸ் சப்பரசன்ட் போன்ற பிற மருந்துகளை எதிர்கால ஆராய்ச்சி முன்னிறுத்த வேண்டும். கர்ப்பக் காலத்தின் நெஞ்செரிச்சலுக்கு அக்குபங்சர் மற்றும் பிற இணைப்பு சிகிச்சைகளுக்கு அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது. சிகிச்சை தலையீட்டோடு தொடர்புடைய ஏதேனும் விரும்பத்தகாத விளைவுகள், சிகிச்சை குறித்த தாய்க்குரிய திருப்தி மற்றும் கர்ப்பிணி பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடுதல் ஆகியவற்றை எதிர்கால ஆராய்ச்சி கருத்தில் கொள்ள வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information