ஆராய்ச்சி கேள்வி
ஃபைப்ரோமியால்ஜியா கொண்ட மக்களில், ஆரோக்கியம், அறிகுறிகள், உடற்திறன், மற்றும் எதிர்மறையான விளைவுகள் மேல் நீர் சார்ந்த உடற்பயிற்சியின் விளைவுகள் குறித்த ஆய்வுகளை நாங்கள் திறனாய்வு செய்தோம்.
பின்புலம்: ஃபைப்ரோமியால்ஜியா என்றால் என்ன மற்றும் நீர் சார்ந்த பயிற்சி என்றால் என்ன?
ஃபைப்ரோமியால்ஜியா கொண்ட மக்கள் தொடர்ச்சியான, பரவலான உடல் வலி மற்றும் அடிக்கடி ஏற்படும் சோர்வு, விறைப்புத்தன்மை, மனச்சோர்வு, மற்றும் தூங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகளை அனுபவிப்பர்.
ஒரு நீச்சல் குளத்தில், இடுப்பு, மார்பு, அல்லது தோள் அளவு ஆழத்தில் நின்றுக் கொண்டு பயிற்சி செய்வதே நீர் சார்ந்த பயிற்சியாகும். கண்காணிக்கப்பட்ட குழு நீர்சார் பயிற்சி திட்டங்களின் (ஒரு பயிற்றுவிப்பாளர் தலைமையில்) விளைவுகளை இந்த திறனாய்வு பரிசோதித்தது.
ஆய்வு பண்புகள்
அக்டோபர் 2013 வரையிலான இலக்கியத்தை நாங்கள் தேடி, ஃபைப்ரோமியால்ஜியா கொண்ட 866 பெண்கள் மற்றும் 15 ஆண்கள் சம்மந்தப்பட்ட 16 ஆய்வுகளை கண்டறிந்தோம்; 439 பேர் நீர்சார் பயிற்சி திட்டங்களுக்கு வகுக்கப்பட்டிருந்தனர்.
ஒன்பது ஆய்வுகள், நீர்சார் உடற்பயிற்சியை உடற்பயிற்சியின்மையோடு ஒப்பிட்டின; ஐந்து ஆய்வுகள், நீர்சார் உடற்பயிற்சியை நிலம் சார்ந்த உடற்பயிற்சியோடு ஒப்பிட்டின, மற்றும் இரண்டு ஆய்வுகள் நீர்சார் உடற்பயிற்சியை மற்றொரு வித்தியாசமான நீர்சார் பயிற்சியோடு ஒப்பிட்டின.
முக்கிய முடிவுகள்: உடற்பயிற்சி செய்யாத மக்களோடு ஒப்பிடும்போது நீர்சார் உடற்பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கானது
0 முதல் 100 அலகுகள் கொண்ட ஒரு அளவீட்டில், ஒட்டு மொத்த-நலன் (பல்பரிமாண செயல்பாடு)
ஆய்வின் முடிவில், உடற்பயிற்சி செய்யாத மக்களை விட நீர்சார் உடற்பயிற்சி செய்தவர்கள் தங்களின் ஒட்டு மொத்த-நலனை ஆறு அலகுகள் சிறப்பாக மதிப்பிட்டனர்.
0 முதல் 100 அலகுகள் கொண்ட ஒரு அளவீட்டில், உடற் செயல்பாடு (சாதரண நடவடிக்கைகளைச் செய்யக் கூடிய திறன்)
ஆய்வின் முடிவில், உடற்பயிற்சி செய்யாத மக்களை விட நீர்சார் உடற்பயிற்சி செய்தவர்கள் தங்களின் உடற் செயற்பாட்டை நான்கு அலகுகள் சிறப்பாக மதிப்பிட்டனர்.
0 முதல் 100 அலகுகள் கொண்ட ஒரு அளவீட்டில், வலி
ஆய்வின் முடிவில், உடற்பயிற்சி செய்யாத மக்களை விட நீர்சார் உடற்பயிற்சி செய்தவர்கள் தங்களின் வலியை ஏழு அலகுகள் சிறப்பாக மதிப்பிட்டனர்.
0 முதல் 100 அலகுகள் கொண்ட ஒரு அளவீட்டில், விறைப்புத்தன்மை
ஆய்வின் முடிவில், உடற்பயிற்சி செய்யாத மக்களை விட நீர்சார் உடற்பயிற்சி செய்தவர்கள் தங்களின் விரைப்புத்தன்மையை 18 அலகுகள் சிறப்பாக மதிப்பிட்டனர்.
தசை வலிமை
உடற்பயிற்சி செய்யாத மக்களை விட நீர்சார் உடற்பயிற்சி செய்தவர்கள் தங்களின் தசை வலிமையை 37% அதிகமாக மேம்படுத்திக் கொண்டனர்.
ஆறு நிமிடங்களில் நடக்கக் கூடிய மீட்டர்கள் மூலம் மதிப்பிடப்படும் இதய நாள செயற்திறன்
உடற்பயிற்சி செய்யாத மக்களை விட நீர்சார் உடற்பயிற்சி செய்தவர்கள் 37 மீட்டர்கள் கூடுதலாக நடந்தனர்.
ஆய்வுகளிலிருந்து விலகல்கள்
100 பேர் கொண்ட நீர்சார் பயிற்சி குழுக்களில், இரண்டு கூடுதலான பங்கேற்பாளர்கள் ஆய்வுகளிலிருந்து வெளியேறினர் (15 நீர்சார் பயிற்சியாளர்கள் கைவிட்டனர், அதே சமயம் 13 பயிற்சி-செய்யாதவர்கள் ஆய்வைக் கைவிட்டனர்).
சான்றின் தரம்-கட்டுப்பாட்டுக்கு எதிராக நீர்சார் பயிற்சி
ஒட்டுமொத்த-நலன் மற்றும் செயல்படுவதற்கான திறனின் மீது மேற்படியான ஆராய்ச்சி, இந்த முடிவுகளின் மேல் நமக்குள்ள நம்பிக்கைக்கு ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது மற்றும் முடிவுகளை மாற்றக் கூடியது.
வலி, விறைப்புத் தன்மை, தசை வலிமை, மற்றும் இதயநாளத் செயற்திறன் மீது மேற்படியான ஆராய்ச்சி, இந்த முடிவுகளின் மேல் நமக்குள்ள நம்பிக்கைக்கு ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது மற்றும் முடிவுகளை மாற்றக் கூடியது.
முக்கிய முடிவுகள்: நீர் சார் உடற்பயிற்சி செய்த மக்களோடு நிலம்-சார்ந்த உடற்பயிற்சி செய்தோரை ஓப்பிடு செய்ததற்கானது.
இரண்டு திட்டங்களையும் செய்தவர்கள், ஒட்டுமொத்த-நலன், உடற் செயல்பாடு, வலி, மற்றும் விறைப்புத் தன்மை ஆகியவற்றில் ஒரே மாதிரியான முடிவுகளை கொண்டிருந்தனர். எனினும், நிலத்தில் உடற்பயிற்சி செய்த மக்கள் நீர்சார் பயிற்சி செய்தவர்களை விட 9% கூடுதலாக தங்கள் தசை வலிமையை மேம்படுத்திக் கொண்டனர். இரு குழுக்களிலிருந்தும், கிட்டத்தட்ட சமமான எண்ணிக்கையில் மக்கள் விலகியிருந்தனர்.
சான்றின் தரம்-நீர்சார் பயிற்சிக்கு எதிராக நிலம்-சார்ந்த பயிற்சி
இதுவரை மிக சில ஆய்வுகளே செய்யப்பட்டுள்ள நிலையில், முடிவுகளை பற்றி நாங்கள் மிகவும் உறுதியற்றதாக இருக்கிறோம்.
முக்கிய முடிவுகள்: ஒரு விதமான நீர் சார் உடற்பயிற்சி செய்தவர்களோடு மற்றொரு விதமான நீர்சார் உடற்பயிற்சி செய்தோரை ஓப்பிடு செய்ததற்கானது.
இந்த ஒப்பீட்டில், இரண்டு ஆய்வுகள் இருந்தன: ஒன்று, ஆய் சி-யை (தண்ணீருக்குள் தாய் சி) தண்ணீருக்குள் தசை நீட்டித்தலோடு ஒப்பிட்டது, மற்றொன்று நீச்சல்குள நீர் சார் பயிற்சியை கடல் நீர் சார் பயிற்சியோடு ஒப்பிட்டது. விறைப்புத் தன்மையில் காணப்பட்ட முக்கியமான வித்தியாசம் ஒன்று மட்டுமே ஆய் சி நீர் சார் பயிற்சிக்கு சாதகமாக இருந்தது.
சான்றின் தரம்-நீர்சார் திட்டங்கள் ஒன்றுக்கொன்று எதிராக
இதுவரை மிக சில ஆய்வுகளே செய்யப்பட்டுள்ளதால், மேற்படியான ஆராய்ச்சி இந்த முடிவை மாற்ற வாய்ப்பு உள்ளது.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.