பின்னணி
மூளை காயங்கள், இதயம் அல்லது நுரையீரல் நோய்கள் , மன நல நோய்கள் அல்லது காயங்கள் அல்லது எலும்புகள் மற்றும் தசைகள் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றால் இயலாமை உள்ள வயது வந்தவர்களின் புனர்வாழ்வில், இலக்கு நிர்ணயம் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படுகிறது.ஆரோக்கிய நிபுணர்கள், தங்களின் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களின் குறிக்கோள்களை நோக்கி வேலை செய்ய இலக்குகளை பயன்படுத்துகிறார்கள். புனர்வாழ்வுக்கு பின்வரும் நல்ல ஆரோக்கிய விளைவுகளை அடைதல் மீது இலக்கு நிர்ணய நடவடிக்கைகள் என்ன விளைவை கொண்டிருக்கும் என்று ஆராய்ந்த ஆய்வுகள் ஏதாவது இருந்தால், அதை இந்த திறனாய்வில் சுருக்கமாக கூறுகிறோம்.
முடிவுகள்
இந்த திறனாய்வு, பல்வேறு நாடுகள் மற்றும் மருத்துவ சூழ்நிலைகளில் புனர்வாழ்வு பெற்ற மொத்தம் 2846 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட, டிசம்பர் 2013 முன் வரை வெளியிடப்பட்ட 39 ஆய்வுகளை கண்டது. ஆய்வுகள், இலக்கு நிர்ணயத்திற்கு ஒரு பரவலான வெவ்வேறு அணுகுமுறைகளை பயன்படுத்தின மற்றும் பல பல்வேறு வழிகளில் இந்த அணுகுமுறைகளின் திறனை சோதனை செய்தன. ஒட்டுமொத்தமாக, இலக்கு நிர்ணயம், நோயாளிகள் ஒரு உயர்ந்த வாழ்க்கைத் தரம் அல்லது நல்வாழ்வை உணர்தல் ஆகியவற்றை அடைய, மற்றும் அவர்கள் தேர்வு செய்த இலக்குகளை அடைய அவர்களின் சொந்த திறமையில் அவர்களின் அதிக நம்பிக்கைக்கு உதவுகிறது என்பதற்கு இந்த ஆய்வுகள் மிகவும் குறைந்த தர சான்றை வழங்கின.இலக்கு நிர்ணயம், புனர்வாழ்விற்கு பிறகு மக்களின் செயல்பாட்டு திறன்களை அதிகரிக்கிறது அல்லது புனர்வாழ்வின் போது எவ்வளவு கடினமாக அவர்கள் தங்களின் சிகிச்சை தலையீடுகளுடன் முயற்சிக்கின்றனர் என்பதற்கு உறுதியான ஆதாரம் தற்போது இல்லை.
புனர்வாழ்வில் சம்பந்தப்பட்ட மக்களில், இலக்கு நிர்ணயம் தீய நிகழ்வுகளின் அபாயத்தை குறைக்கிறது அல்லது அதிகரிக்கிறது (மரணம் அல்லது மறுபடியும் மருத்துவமனையில் சேர்த்தல் போன்ற) என்பதை சொல்ல பற்றாக்குறையான தகவல் உள்ளது. புனர்வாழ்வில் இலக்கு நிர்ணயம் பற்றி படிக்க பல்வேறு வகையான வழிமுறைகளை கையாண்டதாலும்,இன்றைய தேதி வரை உள்ள பல ஆய்வுகளில் இருக்கும் வடிவமைப்பு வரைமுறைகளாலும்,இந்த திறனாய்வின் முடிவுகளை எதிர்கால ஆய்வுகள் மாற்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இலக்கு நிர்ணய நடைமுறையின் பகுதிகள் (இலக்குகள் எவ்வளவு கடினமானவை, எவ்வாறு சிகிச்சை இலக்குகள் தேர்ந்தெடுக்க படவேண்டும் மற்றும் முன்னிலைப்படுத்த படவேண்டும், இலக்குகள் எவ்வாறு மருத்துவ நடைமுறையில் பயன்படுத்த பட வேண்டும், மற்றும் இலக்குகளை தொடர்ந்த முன்னேற்ற பாதையில் எவ்வாறு பின்னூட்டு வழங்க பட வேண்டும் என்பன போன்ற) எவ்வாறு சிறந்த ஆரோக்கிய விளைவுகளுக்கு பங்களிக்க அல்லது பங்களிக்க முடியாமல் போகும் என்பதின் மேல் நமது புரிந்து கொள்ளுதலை அதிகரிக்க நமக்கு அதிகமான ஆராய்ச்சியும் தேவைப்படுகிறது.
மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.