விளையாட்டுகளில், குறிப்பாக ஓடுதல், உதைத்தல், திசைகளை மாற்றுதல் முதலியவை உள்ளடங்கிய கால்பந்து மற்றும் ஹாக்கி போன்ற போட்டிகளில் உடற்பயிற்சி தொடர்பான இடுப்பு வலி பொதுவானதாக உள்ளது. விளையாட்டு வீரர்கள், விளையாட்டு நடவடிக்கைகளை மீண்டும் தொடர பல மாத தாமதம் ஏற்படலாம், மேலும் அவர்களால் முன்பிருந்த அளவிற்கு விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் போகலாம். பொதுவாக, சிகிச்சையளிக்கும் மருத்துவர், தசை, தசைநாண் மற்றும் தசைநார் விகாரங்கள் மற்றும் எலும்பு அழுத்த எதிர்விளைவு என ஒருங்கிணைந்திருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோளாறுகளுக்கான சிகிச்சையில் ஈடுபடுகிறார். ஆரம்ப கால ஓய்வு; தசைகளை வலுப்படுத்துதல்; இடுப்பு மற்றும் இடுப்பு மூட்டு பகுதிகளை நிலைப்படுத்துதல்; இடுப்பு தசைகள் நீட்சி; மின்சிகிச்சை முறைககள் (எடுத்துக்காட்டாக, டென்ஸ்; லேசர் ஊடொளி மற்றும் மீயொலி சிகிச்சை); கையாள்கை சிகிச்சை; ஸ்டீராய்டற்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகள்; ஸ்டீராய்ட் ஊசி அல்லது ப்ரோலோதெரபி (இயல்பான திசு வளர்ச்சியை தூண்டவும் பழுதுபார்க்கவும், வளர்ச்சி காரணி தயாரிப்பு தூண்டிகளை ஊசி கொண்டு உட்செலுத்தும் சிகிச்சை) போன்றவற்றை உள்ளடக்கிய பழமையான சிகிச்சைகள் சிகிச்சைக்கான முதல் தேர்வாய் இருக்கின்றன .
இந்த திறனாய்வில், உடற்பயிற்சி-தொடர்பான இடுப்பு வலி கொண்ட 122 விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய இரண்டு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் சேர்க்கப்பட்டன. பங்கேற்பாளர்களின் வயது 18 முதல் 50 வரை இருந்தது , ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் ஆண்களாய் இருந்தனர். இவர்கள், குறைந்தது இரண்டு மாதங்கள் இடுப்பு வலியை உடையவர்களாய் இருந்தனர். ஒரு சோதனை, 'பழமையான' செயலற்ற வழிமுறைகளைக் கொண்ட இயன்முறை சிகிச்சையோடு (நீட்டல் பயிற்சிகள், மின்முறை சிகிச்சை மற்றும் குறுக்கு உராய்வு நீவுதல் சிகிச்சை) ஒப்பிடுகையில், உடற்பயிற்சி கொண்டு சிகிச்சை (இடுப்பு மற்றும் வயிற்று தசைகளை வலுப்படுத்துதல் மற்றும் தசை ஒருங்கிணைப்பு பயிற்சி) அளிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களில், சிகிச்சை முடிந்த 16 வாரங்கள் கழித்து 'வெற்றிகரமான சிகிச்சை' (முதன்மையாக, வலி விளைவுகளை அடிப்படையாய் கொண்ட) மற்றும் இடுப்பு வலி இல்லாமல் அதே அளவில் விளையாட்டிற்கு திரும்பும் விகிதம் ஆகியவற்றிற்கு நேர்நிலையான முடிவுகளை காண்பித்தது . இரண்டாவது ஆய்வு , உடற்பயிற்சி சிகிச்சையை , பல-பாங்கியல் சிகிச்சையோடு (வெப்பம், கையாள்கை சிகிச்சை மற்றும் நீட்டல் சிகிச்சை ) ஒப்பிட்டது, மற்றும் அது, குழுக்கள் இடையே 'வெற்றிகரமான சிகிச்சை' மற்றும் விளையாட்டிற்கு திரும்புதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாட்டை காட்டவில்லை, ஆயினும் பல-பாங்கியல் சிகிச்சையை தொடர்ந்து , விளையாட்டு வீரர்களால் முன்கூட்டியே விளையாட்டிற்கு திரும்ப முடிந்தது என்பதை காட்டியது.
கிடைக்கப் பெற்றுள்ள ஆதாரம், தடகள விளையாட்டு வீரர்களோடு பிரத்யேகமாக தொடர்புடையதாகும், மற்றும் இது, குறைவான எண்ணிக்கையிலான ஆய்வுகள் நிமித்தமாகவும், ஒவ்வொரு விளைவிற்கான குறைவான பங்கேற்பாளர்கள் நிமித்தமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை உறுதி செய்ய மேற்படியான சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் தேவைப்படுகிறது.
மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.