மிக முன்னேறிய நாடுகளில், முன்னமே ஏற்படும் இதயத்தமனி தொடர்பான நோய் மற்றும் மரணத்திற்கு இதயத்தமனி நோய் (கரோனரி ஹார்ட் டிசீஸ், சிஹட்ச்டி ) ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இரண்டாம் நிலை தடுப்பு என்பது, நிறுவப்பட்ட சிஹட்ச்டி உள்ளவர்களுக்கு மீண்டும் இதய நிகழ்வுகள் மற்றும் மரணம் ஏற்படாமல் தடுக்க நோக்கம் கொண்ட சிகிச்சை தலையீடுகளை விவரிக்க பயன்படுத்தப்படும் ஒரு சொற்தொகுதியாகும். சிஹட்ச்டி கொண்ட தனிநபர்கள், இதயத்தமனி நிகழ்வுகள் மற்றும் மரண அபாயம் அதிகமாக கொண்டவர்களாக இருக்கிறார்கள். இரண்டாம் நிலை நோய் தடுப்பில், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. யோகா, ஒரு உடலியல் நடவடிக்கையாகவும் மற்றும் ஒரு உளவியல் மேலாண்மை உக்தியாகவும் இரண்டு விதமாய் கருதப்படுகிறது. யோகாவின் உடலியல் மற்றும் உளவியல் நன்மைகள் நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் பொருத்தமற்ற யோகா நடைமுறை, தசை வேதனை மற்றும் தசை நலிவு போன்ற தசையெலும்பு கூட்டமைப்பு காயங்களுக்கு வழிவகுக்கும். இதய நிகழ்வுகள், மரணம், மற்றும் ஆரோக்கியத்-தொடர்புடைய வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் சிஹட்ச்டியின் இரண்டாம் நிலை நோய் தடுப்பில், யோகாவின் திறனை தீர்மானிக்க இந்த திறனாய்வு நோக்கம் கொண்டுள்ளது. இந்த திறனாய்வின் சேர்க்கை திட்ட அளவைகளை சந்தித்த எந்த ஒரு சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளையும் நாங்கள் காணவில்லை. எனவே, சிஹட்ச்டியின் இரண்டாம் நிலை நோய் தடுப்பில், யோகாவின் திறன் நிச்சயமற்றதாக உள்ளது. உயர்-தர சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் தேவைப்படுகிறது.
இது, இதற்கு முன்னர் 2012-ல் வெளியான ஒரு திறனாய்வின் மேம்படுத்தல் ஆகும்.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.