இந்த ஆய்வு கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூருவது:
சுய மேலாண்மை கற்கை நிரல்கள், சுய மேலாண்மை திறன்கள், வலி மற்றும் செயல்பாட்டு திறன்னை சற்ரே மேம்படுத்தலாம், ஆனால் வாழ்க்கையை உத்வேகமாக மற்றும் சாதகமான நோக்குடன் ஈடுபாடுதல், கீல் வாததின் அறிகுறிகளை, வாழ்க்கை தரம் மற்றும் இடை நிற்றல் (drop-out) விகிதம், ஆகியவற்றை வழக்கமான சிகிச்சையுடன் ஒப்பிடும்போது குறைக்க இயலவில்லை.
இதர சிகிச்சைகளுடன் (உடற்பயிற்சி, இயன்முறை மருத்துவம்,சமூக ஆதரவு அல்லது குத்தூசி) அல்லது உடல்நல தகவல்கள் மட்டும் அளிப்பதுடன், ஓப்பிடும்போது சுய மேலாண்மை கற்கை நிரல்கள் அனேகமாக கூடுதலாக பயன் அளிக்காது.
கீல்வாதம் மற்றும் சுய-மேலாண்மை கற்கை நிரல்கள் என்றால் என்ன?
கீல்வாதம் (OA) உங்கள் முழங்கால் அல்லது இடுப்பு, அல்லது கைகளின் மூட்டுகளை, தாக்கும் நோய் ஆகும். மூட்டை சூற்றி சூழ்ந்துள்ள குருத்தெலும்பு படிப்படியாக தெய்ந்து மூட்டு இடைவெளியை குறுகலாக்குகிறது. கடுமையான நோய் முற்றிய நிலைகளில், குருத்தெலும்பு புறமென்படிகச்சவ்வகங்கள் முற்றிலுமாக தேய்ந்து காணாமல் போய்விடும்,மற்றும் மூட்டசைவின் பொழுது எலும்புகள் ஒன்றோடொன்று உராய்நது அதனால் மூட்டு வலி ஏற்படும். ஒவ்வொரு சமயம் மூட்டு நிலையில்லா தன்மையையும் உருவாக்கும்.
சுய-மேலாண்மை கற்கை நிரல்கள் நாள்பட்ட நோய் கொண்டவர்கள் தங்கள் நோய் நிலைகளுக்கான மேலாண்மையில் தன்னார்வ பங்களிப்பை தானாக ஏற்படுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நடத்தையியல்பு தன்மை (behavioral interventions),கொண்ட இடைக்குறுக்கீடாகும். இந்த திட்டங்கள், மருத்துவ பராமரிப்புக்கு மாற்றாக இல்லாமல்,அதற்கு பக்கபலமாக இருக்கும் வகையில், நோய் விடுபடுதலில் முன்னேற்றத்தை குறிக்கோளாக கொண்டது. நோயாளிகளுக்கு நோய் நிலைகுறித்து கற்பிக்க பயன்படுத்தப்படும்,உள்ளடக்கம் மற்றும் நோய் அறிகுறிகளை எப்படி சிறந்த முறைகளில் நிர்வகித்து கொள்ள முடியும் என்பதற்கான விளக்கம், பயன்படுத்தப்படும் முறை ஒவ்வேறு நிரல்களுக்கு இடையே வேறுபடுகிறது.
சுய- மேலாண்மை கற்கை நிரல்கள் பெறும் கீழ்வாதம் மக்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கான சிறந்த கணிப்பு:
சுய மேலாண்மை கல்வி திட்டத்தை பூர்த்தி செய்தவர்கள் 12 மாதங்களுக்கு பிறகு தங்கள் சுய மேலாண்மை திறன்னை, 1 முதல் 10 என்ற அளவுகோலில் (அதிக மதிப்பெண் சுய மேலாண்மையில் முன்நேற்றம் என்று பொருள்), 0.4 புள்ளிகள் முன்நேற்றம் (1.2 புள்ளிகள் மேம்பட்டது முதல் 0.4 புள்ளிகள் மோசமானது) அடைந்தாக மதிப்பிட்டனர். (4% திட்டவட்டமான முன்னேற்றம்; 4 % எந்த முன்னேற்றமும் அல்லதா நிலையில் இருந்து 12% முன்நேற்றம்).
-சுய மேலாண்மை திட்டத்தை நிறைவு செய்தவர்கள், தங்கள் சுய மேலாண்மை திறன்களை 6.2 புள்ளிகள் என 1 முதல் 10 வரை கொண்ட மதிப்பீட்டு அளவு கோளில் தங்களை சுயதர நிர்ணயம் செய்தார்கள்.
கவனக்கட்டுப்பாடு முறையை பெற்றுக்கொண்டுள்ளவர்கள் தங்கள் சுய மேலாண்மை திறன்களை 5. 8 புள்ளிகள் என 1 முதல் 10 வரை கொண்ட மதிப்பீட்டு அளவு கோளில் தங்களை சுயதர நிர்ணயம் செய்தார்கள்.
சுய மேலாண்மை திட்டத்தை நிறைவு செய்தவர்கள் 12 மாதங்களுக்கு பிறகு, தங்கள் வலி 0. 8 புள்ளிகள் குறைவு (0.3- 0.14 புள்ளிகள் குறைந்த) என 0 முதல் 10 வரை கொண்ட மதிப்பீட்டு அளவு கோளில்(குறைந்த மதிப்பீடு என்பது குறைந்த வலி அளவை குறிப்பது) தங்களை சுயதர நிர்ணயம் செய்து இருக்கிறார்கள். 12 (8% முழுமையான முன்னேற்றம்).
-சுய மேலாண்மை திட்டத்தை நிறைவு செய்தவர்கள், தங்கள் வலி அளவை 5 புள்ளிகள் என 0 முதல் 10 வரை கொண்ட மதிப்பீட்டு அளவு கோளில் தங்களை சுயதர நிர்ணயம் செய்தார்கள்.
- கவனக்கட்டுப்பாடு முறைமையை பெற்றுக்கொண்டுள்ளவர்கள் தங்கள் வலி அளவை 5. 8 புள்ளிகள் என 0 முதல் 10 வரை கொண்ட மதிப்பீட்டு அளவு கோளில் தங்களை சுயதர நிர்ணயம் செய்தார்கள்.
சுய மேலாண்மை திட்டத்தை நிறைவு செய்தவர்கள் 12 மாதங்களுக்கு பிறகு, தங்கள் கீல்வாத அறிகுறிகள் 0. 14 புள்ளிகள் வரை குறைவாக (0.54 என்ற குறைவான புள்ளிகள் முதல் ௦.26 என்ற உயர்ந்த புள்ளிகள் வரை) என 0 முதல் 10 வரை கொண்ட மதிப்பீட்டு அளவு கோளில்(குறைந்த மதிப்பீடு என்பது கீல்வாத அறிகுறிகளின் எண்ணிக்கை குறைவதை குறிகின்றது) தங்களை சுயதர நிர்ணயம் செய்து இருக்கிறார்கள். (1 % முழுமையான முன்னேற்றம்).
-சுய மேலாண்மை திட்டத்தை நிறைவு செய்தவர்கள், தங்கள் கீல்வாத அறிகுறிகள் 4.1 புள்ளிகள் என 0 முதல் 10 வரை கொண்ட மதிப்பீட்டு அளவு கோளில் தங்களை சுயதர நிர்ணயம் செய்தனர்.
- கவனக்கட்டுப்பாடு முறைமையை பெற்றுக்கொண்டுள்ளவர்கள் தங்கள் கீல்வாத அறிகுறிகள் 4.2 புள்ளிகள் என 0 முதல் 10 வரை கொண்ட மதிப்பீட்டு அளவு கோளில் தங்களை சுயதர நிர்ணயம் செய்தனர்.
சுய மேலாண்மை திட்டத்தை நிறைவு செய்தவர்கள் 12 மாதங்களுக்கு பிறகு, தங்கள் செயல்பாடுகள் 0. 04 புள்ளிகள் வரை குறைவாக (0.02 என்ற குறைவான புள்ளிகள் முதல் ௦.10 என்ற உயர்ந்த புள்ளிகள் வரை) என 0 முதல் 3 வரை கொண்ட மதிப்பீட்டு அளவு கோளில்(குறைந்த மதிப்பீடு என்பது செயல்பாட்டில் முன்னேற்றம் என்பதை குறிக்கின்றது) தங்களை சுயதர நிர்ணயம் செய்thargal. (4 % முழுமையான முன்னேற்றம்).
-சுய மேலாண்மை பயிற்சி திட்டத்தை நிறைவு செய்த மக்கள் 1முதல் 3 கொண்ட அளவுகோலில் 1.25 புள்ளிகள் என்று தங்கள் செயல்பாட்டை மதிப்பிடப்பட்டனர்.
- கவனக்கட்டுப்பாடு முறைமையை பெற்றுக்கொண்டுள்ளவர்கள் தங்கள் செயல்பாடுகள் 1.29 புள்ளிகள் என 0 முதல் 3 வரை கொண்ட மதிப்பீட்டு அளவு கோளில் தங்களை சுயதர நிர்ணயம் செய்தனர்.
சுய மேலாண்மை திட்டத்தை நிறைவு செய்தவர்கள் 12 மாதங்களுக்குப் பிறகு, தங்கள் வாழ்க்கை தரம் 0. 01 புள்ளிகள் வரை குறைவாக (0.03 என்ற குறைவான புள்ளிகள் முதல் ௦.01 என்ற உயர்ந்த புள்ளிகள் வரை) என 0 முதல் 1 வரை கொண்ட மதிப்பீட்டு அளவு கோளில்(உயர்ந்த மதிப்பீடு என்பது வாழ்க்கை தரம் முன்னேற்றம் என்பதை குறிக்கின்றது) தங்களை சுயதர நிர்ணயம் செய்thargal. (1 % முழுமையான மோசமான பின்னடைவு).
-சுய மேலாண்மை பயிற்சி திட்டத்தை நிறைவு செய்த மக்கள் 1முதல் 10 என்ற அளவுகோலில் 0.56 புள்ளிகள் என்று தங்கள் வாழ்க்கை தரத்தை மதிப்பிடப்பட்டனர்.
சுய மேலாண்மை திட்டத்தில் இருந்த 100 பேர்களில் மேலும் ஒருவர் இடை நிறுத்தி வெளியேறி விட்டார். (1 % முழுமையான முன்னேற்றம்)
- சுய மேலாண்மை திட்டத்தில் இருந்த 100 பேர்களில் 13 பேர் இடை நிறுத்தி வெளியேறி விட்டனர்.
- ஒரு சுய மேலாண்மை திட்டம்பயிற்சி பெற்ற நோயாளிகளில் நூறில் பதிமூன்று பேர் பயிற்சியை கைவிட்டார்கள்.
- கவனக்கட்டுப்பாடு முறைமையை பெற்றுக்கொண்டுள்ளவர்கள் இருந்த 100 பேர்களில் 12 பேர் இடை நிறுத்தி வெளியேறினர்.
மொழி பெயர்ப்பு: வினோத் குமார் சுப்ரமணியன் மற்றும் ஐ.சி.பி.என்.அர் குழு.