பின்னணி
வைட்டமின் டி ஒரு நுண்ணூட்டச் சத்து, எலும்பு வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு மிக முக்கியமானது. வைட்டமின் D குறைபாடு என்புருக்கி நோய்க்கு வழிவகுக்கும் மற்றும் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கும் வழிவகுக்கும் கூடுதாலாக சுவாச நோய் தொற்றும் உண்டாகும் பல ஆய்வுகள் குழந்தைகள் மத்தியில் வைட்டமின் டி குறைபாடு மற்றும் நோய்த் தொற்றுகள் இடையில் ஒரு தொடர்பு உள்ளதாக கூருகின்றன, மற்றும் வைட்டமின் டி யின் பங்கு நோய் எதிர்ப்பு அமைப்புடன் தொடர்புடையது என கருதப்படுகிறது இந்த ஆய்வில் கோக்ரன் ஆராய்ச்சியாளர்கள் வைட்டமின் D யின் ஊட்டச்சத்தின் மூலமாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நோய் தொற்றை தடுக்க முடியுமா என்பதை ஆராய்ச்சி செய்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வில் நிமோனியா, காச நோய் (TB), வயிற்றுப்போக்கு, மற்றும் மலேரியா நோய்த் தொற்றுகளின் பங்கை கண்டுள்ளனர்.
ஆய்வு பண்புகள்
ஆய்வு ஆசிரியர்கள் 17 ஜூன் 2016 வரை உள்ள ஆதாரங்களை ஆய்வு செய்துள்ளனர், மற்றும் நான்கு சோதனைகளில் மொத்தம் ஐந்து வயது கீழ் உள்ள 3198 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது சேர்க்கப்பட்டுள்ள சோதனைகள் ஆப்கானிஸ்தான், ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்டன.
முக்கிய கண்டுப்பிடிப்புகள்
இந்த மறுஆய்வில் வைட்டமின் டி கூடுதல் சேர்ப்பின் விளைவை இறப்பின் மீது கண்டறிய முடியவில்லை (குறைந்த தரச் சான்று)நிமோனியா முதல் முறை தோன்றின நிகழ்வு அல்லது நிமோனியா மட்டுமே உண்டான அறிகுறி; அல்லது நிமோனியா தொற்றை உடைய குழந்தைகள், எதுவாக இருந்தலும் மருத்துவமனைச் சோதனைகள் மூலம் உறுதிசெய்யபப்பட்ட நிலை (மிதமான தர சான்று).வைட்டமின் D கூடுதாலாக கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் மற்றும் கொடுக்கப்படாத குழந்தைகளுக்கும் ஏற்பட்ட முதல் வயிற்று போக்கிற்கும் அல்லது தொடர்ச்சியான வயிற்று போக்கிற்கும் பெரிதளவான வித்தியாசம் இல்லை என்பதை வெளிப்படுத்த குறைந்த ஆதாரமே இருக்கின்றது. வைட்டமின் டியின் தாக்கங்கள் மருத்துவமனை அனுமதியில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை ஒரே ஒரு சிறிய ஆய்வு இந்த அளவீடை காண்பிக்கின்றபடியால் இதைக்குறித்து அதிகம் அறிய முடியவில்லை (மிகவும் குறைந்த தரச் சான்று).கூடுதல் சேர்ப்பு கால இறுதியில் சராசரி இரத்த உயிரணுவில் வைட்டமின் டியின் செறிவு கூடுதலாக சேர்க்கப்படாத குழந்தைகளைக் காட்டிலும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளிடம் அதிகமாக இருந்தன (குறைந்த தரச் சான்று) ஆப்கானிஸ்தானில் நடத்திய ஒரு பெரிய ஆய்வில் உறுதிசெயய்பட்ட நிமோனியாவின் தொடர் பாதிப்பு அதிகத்திருப்பதை காண்பிக்கிறது ஆனால் உறுதிப்பட்ட மற்றும் உறுதிப்படுத்தப்படாத நிமோனியா மீது இல்லை. சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகளில் எவையும் காசநோய் அல்லது மலேரியா விளைவுகளைக் கூறவில்லை.
முடிவுகள்
ஐந்து வயது உட்பட்ட குழந்தைகளில் செய்யப்பட்டஒரு பெரிய ஆய்வு, வைட்டமின் டி இறப்பின் மீதோ அல்லது சுவாச நோய் தொற்றை குறித்தோ விளைவுகளை தெளிவுபடுத்தவில்லை வைட்டமின் டியின் கூடுதல் சேர்ப்பு மூலம் காசநோய் மற்றும் மலேரியா போன்ற நோய்த்தொற்றை தடுக்கமுடியும் என்று உறுதிபடுத்தும் ஆய்வுகளை நாம் காண முடியவில்லை
மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [வசந்த், ஜாபெஸ் பால்]