உடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் தசை நோவை தடுக்கவும், குணப்படுத்தவும் அளிக்கப்படும் குளிர்-நீர் ஆழ்த்துதல்

தாமதமாக தொடங்கும் தசை நோவு, பொதுவாக விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைக்கு பின்னர் ஏற்படக் கூடியது. குளிர்-நீர் ஆழ்த்துதல் ( Cold-water immersion, CWI), என்பது மக்கள் தங்களை 15 ° சென்டிக்ரேட்டிற்கும் குறைவான வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் ஆழ்த்துவதாகும். இது, சில நேரங்களில், உடற்பயிற்சிக்கு பிறகு ஏற்படும் தசை நோவை கையாளவும் மற்றும் மீட்பு நேரத்தை துரிதப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

எங்கள் ஆய்வுரை மொத்தம் 366 பங்கேற்பாளர்களைக் கொண்ட 17 சிறிய சோதனைகள் உள்ளடக்கியது. ஆய்வின் தரம் குறைவாக இருந்தது. பதினான்கு சோதனைகள், உடற்பயிற்சிக்கு பின் அளிக்கப்படும் குளிர்-நீர்ஆழ்த்துதலோடு, ஓய்வு அல்லது சிகிச்சையின்மை போன்ற 'செயலற்ற' சிகிச்சை முறையோடு ஒப்பிட்டன. குளிர்-நீர் ஆழ்த்துதலின் வெப்பநிலை, நேரம் மற்றும் அடுக்குநிகழ்வு ஆகியவை உடற்பயிற்சிகள் மற்றும் அமைப்புகள் போலவே ஆய்வு சோதனைகளுக்கிடையே வேறுப்பட்டன. 'செயலற்ற' சிகிச்சையோடு ஒப்பிடுகையில், குளிர்-நீர் ஆழ்த்துதல் தசை நோவை உடற்பயிற்சி செய்த 24,48,72, மற்றும் 96 மணி நேரத்திற்கு பிறகு வரைக் கூட குறைக்கிறது என்பதிற்கு சில சான்றுகள் இருந்தது. குளிர்-நீர் ஆழ்த்துதல், மீட்சியை மேம்படுத்தி/ பிறகு உடனடியாக, சோர்வை குறைத்தது என்று பங்கேற்பாளர்கள் கருதினார்கள் என்று நான்கு சோதனைகளிலிருந்த வரம்பிற்குட்பட்ட சான்றுகள் சுட்டிக் காட்டின. பெரும்பாலான சோதனைகள், குளிர்-நீர் ஆழ்த்துதல் தொடர்பான சிக்கல்களைக் கருத்தில் கொள்ளவில்லை. எனவே, இவை பிரச்சனைக்குரியவையா என்பதைச் சொல்ல முடியவில்லை. குளிர்-நீர் ஆழ்த்துதலுடன் ஒப்பிடப்பட்ட சூடான அல்லது முரண்பாடான (மாற்று சூடு/குளிர்) தண்ணீரில் ஆழ்த்துதல், மிதமான மெல்லோட்டம் மற்றும் அழுத்தம் தரும் மேலுறைகள் போன்ற பிற வகையான ஒப்பிடுகளுக்கான தரவு குறைந்த அளவே இருந்தது. இவை எதுவும், தலையீடுகளை ஒப்பிடும்போது அவற்றிற்கிடையே முக்கியமான வேறுபாடுகள் எதையும் காட்டவில்லை.

குளிர்-நீர் ஆழ்த்துதல், உடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் தசை நோவை குறைக்கும் என்று சான்றுகள் காட்டினாலும், குளிர்-நீர் ஆழ்த்துதலின் உகந்த முறை மற்றும் அதன் பாதுகாப்பை பற்றி தெளிவாக தெரியவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information