பெண்கள் பிரசவித்த பிறகு மூவரில் ஒருவருக்கு சிறுநீர் கசிதல் மற்றும் பத்து பேரில் ஒருவருக்கு மலம் கசிதல் இருக்கும். பொதுவாக கர்பகாலத்திலும் மற்றும் பிரசவத்திற்கு பிறகும் அடங்காமை பிரச்சினை வராமல் தடுப்பதற்கும் மற்றும் சிக்கிச்சையாகவும் கூபகத்தளம் தசைகள் பயிற்சிகள் (pelvic floor muscle training) பரிந்துரைக்கப்படுகிறது. கூபகத்தளம் தசைகளை வலுப்படுத்த ஒரு நாளைக்கு பல முறை உடற்பயிற்சி செய்ய பெண்கள் இந்த பயிற்சியில் ஈடுபடுத்த படுகிறார்கள். அவை வழக்கமாக இயன்முறை மருத்துவர் போன்ற ஒரு சுகாதார நிபுணர் மூலம் கற்பிக்கப்படுகின்றன. கூபகத்தளம் தசை பயிற்சிகள் கர்ப்பகாலத்தில் செய்வதனால் பிரசவம் கடினமாகும் என்பதற்கு குறைந்த ஆதாரங்களே உள்ளது. மாறாக, அவர்களுக்கு அது உதவியாக இருக்கலாம் என்பதற்கு பெரிய அளவு ஆதாரங்கள் உள்ளன. கர்பகாலத்தில் சிறுநீர் கசிதல் இல்லாத பெண்களும், உடற்பயிற்சியை கர்பகாலத்திலும் மற்றும் பிரசவத்திற்கு பிறகும் செய்வதினால் பிரசவத்திற்கு பிறகு முதல் ஆறு மாதங்கள் சிறுநீர் கசிதல் சாத்தியத்தை குறைக்க முடியும் என்று இந்த ஆய்வு காட்டுகிறது. சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு அதிக சாத்தியம் உள்ள பெரிய குழந்தையை சுமக்கும் அல்லது ஆயுத பிரசவத்தினை எதிர்பார்க்கும் பெண்களுக்கு பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிரசவத்திற்குப் பின்னர் பெண்களுக்கு தொடங்கக்கூடிய சிறுநீர் கசிவு மற்றும் மல கசிவை குறைக்க இந்த உடற்பயிற்சிகள் உதவ முடியும். உடற்பயிற்சி செய்யும் விகிதங்கள் காலப்போக்கில் குறைகின்றது என்று சில சான்றுகள் கூறினாலும், முதல் ஆண்டிற்கு பிறகு இதன் திறன் நீடிக்கும் என்பதற்கு சொல்ல போதுமான சான்றுகள் இல்லை.
மொழிபெயர்ப்பு: தீபா மோகன் பாபு மற்றும் சி.இ. பி.என்.அர் குழு