மூச்சுக்காற்றூட்டும் இயந்திரத்தினால் (mechanical ventilation), இணைக்கப்பட்டிருக்கும் பட்சிளம் குழந்தைகளுக்கு, தீவிர நெஞ்சக இயன்முறை சிகிச்சை பயனுள்ளதா, என்பதை தீர்மானிக்க போதுமான சான்றுகள் இல்லை. இயந்திரத்தின் காற்றுவாரி (mechanical ventilation) உதவி தேவைப்படுகிற குழந்தைகள், அதிக நுரையிரல் சுரப்புகளினால், நுரையீரல் சரிவு வரும் ஆபத்தில் உள்ளனர். நுரையீரல் சரிவை தடுப்பதற்காக, காற்றுக்குழாயில் உள்ள சுரப்புகளை காலி செய்வதில், மேம்பாடை ஏற்படுத்த, நெஞ்சக இயன்முறை சிகிச்சை(நெஞ்சை தட்டிக் கொடுத்தல், அதிர்வு கொடுத்தல்) பயன்படுத்தப்படுகிறது. இயன் முறை சிகிச்சையின் ஒட்டுமொத்த நன்மை அல்லது தீமை பற்றி, இந்த திறனாய்வு தெளிவாக கண்டறியவில்லை. சில தனிப்பட்ட நெஞ்சக இயன்முறை நுட்பங்கள், மற்றவைகளைக் காட்டிலும், நுரையிரல் விரியாமை (atelectasis) தீர்ப்பது, ஆக்ஸிஜனேற்றத்தை (oxygenation) பராமரிப்பது, போன்ற காரியங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. ஒரு நுட்பம், மற்றொரு நுட்பத்தைக் காட்டிலும் உயர்ந்தது, என்பதை, இந்த முடிவுகள் ஆதரிக்கவில்லை. இந்த திறனாய்வில் எடுத்துக்கொண்ட ஆராய்ச்சிகள் குறைந்த தரம், குறைந்த எண்ணிக்கை, மற்றும், பழைய ஆராய்ச்சிகள் போன்றவையால், இன்றைய தீவிர சிகிச்சை பிரிவில், மூச்சுக்காற்றூட்டும் இயந்திரத்தில்(வெண்டிலேட்டரில்) இருக்கும் குழந்தைகளுக்கான மருத்துவத்தில், நெஞ்சக இயன்முறை சிகிச்சை பயனை விளைவிக்கிறதா, அல்லது, தீங்கை விளைவிக்கிறதா, என்பதை தீர்மானிக்க போதுமான சான்றுகள் இல்லை. மேலும் நல்ல தரமான ஆய்வுகள் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு தேவை.
மொழிபெயர்ப்பு: கா.அழகு மூர்த்தி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு