மனப் பதட்ட மேலாண்மை மற்றும் புலனுணர்வு நடத்தை சிகிச்சை போன்ற சில வகையான உளவியல் சிகிச்சைகளில் பொதுவாக பயன்படுத்தப்படுகின்ற உளவியல் சிகிச்சை தலையீடுகள், அதிர்ச்சிக்கரமான மூளைக் காயம் (டிராமடிக் ப்ரேன் இஞ்சுரி, டிபிஐ) கொண்ட நபர்களின் தேவைகளுக்கு பொருத்தமாக உள்ளன. இந்த சிகிச்சை தலையீடுகளின் ஒரு நன்மை, அவைகள் மிகவும் கட்டமைக்கப்பட்ட உள்ளடக்கத்தை கொடுக்கப்பெற்று, நினைவு, கவனம் மற்றும் சிக்கல் தீர்க்கும் குறைபாடுகளின் சிறப்பு தழுவலுக்கு ஏதுவானதாக டிபிஐ கொண்ட மக்கள் அடிக்கடி அனுபவிக்கும் சிரமங்களை பிரதிபலிப்பதாக உள்ளன. டிபிஐ-க்கு பிறகான மனப் பதட்ட உளவியல் சிகிச்சைகள் பகுதியில் மூன்று சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை இந்த திறனாய்வு அடையாளம் கண்டது. பின்வரும் தலையீடுகளின் திறனிற்காக சில ஆதாரம் காணப்பட்டது: லேசான டிபிஐ-க்கு பின்வரும் கடுமையான மன அழுத்த நோய் சிகிச்சைக்கான புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை (சிபிடி), மற்றும் லேசான முதல் மிதமான டிபிஐ மக்களில் பொது மனப் பதட்ட அறிகுறிகளின் சிகிச்சைக்காக சிபிடி மற்றும் நரம்பியல் புனர்வாழ்வின் இணைப்பு. இந்த அணுகுமுறைகளின் திறன் பற்றிய வலுவான முடிவுகளை எடுப்பதற்கான திறமை, குறிப்பாக தரவு சேகரிக்க கிடைத்த இதே போன்ற நிலைமைகள் மற்றும் பங்கேற்பாளர்கள் கொண்ட சோதனைகளின் சிறிய எண்ணிக்கையால் குறைவாக உள்ளது.
மொழிபெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.