ஆரம்பக்கட்ட மார்பக புற்றுநோய்க் கொண்ட பெண்களில், அறுவை சிகிச்சையை தொடர்ந்த வேதிச் சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சையை வரிசைப்படுத்துதல்

வேதிச் சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சை இரண்டும் மார்பக புற்றுநோய் மீண்டும் ஏற்படும் அபாயத்தை மற்றும் மார்பக புற்றுநோயால் இறக்கும் அபாயத்தை குறைக்கும். பொதுவாக, இந்த சிகிச்சை முறைகள் அறுவை சிகிச்சைக்கு பின்னர் அளிக்கப்படும், ஆனால் அவை ஒரே சமயத்தில் (ஒருங்கிணைந்து) அல்லது ஒன்றன் பின் ஒன்றாக (தொடர்ச்சியாக) கொடுக்கப்பட வேண்டுமா என்பதில் தெளிவற்ற நிலை உள்ளது. அவை தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டால், முதலில் கதிரியக்க சிகிச்சை அல்லது வேதிச் சிகிச்சை பயன்படுத்தப்படலாம், மற்றும் தாமதிக்கப்பட்ட சிகிச்சை முறையின் திறன் குறையக் கூடும் என்பது பற்றி சுட்டிக் காட்டப்படுள்ளது. எனினும், வேதிச் சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சையை ஒரே சமயத்தில் பயன்படுத்துதல், அவற்றை தனியாக வைப்பதை விட அதிக நச்சுத் தன்மை கொண்டதாய் இருக்கும் என்றும் பரிந்துரைக்கபட்டுள்ளது. மார்பக-இழப்பற்ற அறுவை சிகிச்சையை தொடர்ந்து, வேதிச் சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சையை வழங்குவதில் சிறந்த வழியின் மேலான தற்போதைய ஆதாரத்தை இந்த திறனாய்வு பரீட்சித்தது. மூன்று சீரற்ற சோதனைகளை எங்களால் சேர்க்க முடிந்தது. இவற்றில், 853 பெண்களை கொண்ட இரண்டு ஆய்வுகள், கதிரியக்க சிகிச்சை மற்றும் வேதிச் சிகிச்சையை ஒரே சமயத்தில் கொடுத்ததை, வேதிச் சிகிச்சை முதலில் கொடுத்து அதனை தொடர்ந்து கதிரியக்க சிகிச்சையை அளித்ததற்கு எதிராக மதிப்பிட்டன. மூன்றாவது சோதனை, கதிரியக்க சிகிச்சையை தொடர்ந்த வேதிச் சிகிச்சைக்கும் மற்றும் வேதிச் சிகிச்சையை தொடர்ந்த கதிரியக்க சிகிச்சைக்கும் 244 பெண்களை சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்தது. அறுவை சிகிச்சை முடிந்த ஏழு மாதத்திற்குள் வேதிச் சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சை இரண்டும் தொடங்கப்படும் பட்சத்தில், அவை எந்த வரிசை பிரகாரமாய் கொடுக்கப் பட்டாலும் ஒரு பெண்ணில் புற்று நோய் மீண்டும் ஏற்படுவதும் மற்றும் மார்பக புற்று நோயால் அவள் இறக்கும் சந்தர்ப்பங்களும் ஒரே மாதிரியாக தான் இருக்கும் என்று சிறப்பாக நடத்தப்பட்ட இந்த மூன்று சோதனைகளிலிருந்து வெளியான ஆதாரம் பரிந்துரை செய்கிறது. தீங்கு நிகழ்வுகள், பக்க விளைவுகள், அல்லது சிகிச்சை வரிசையோடு தொடர்புடைய வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை குறித்து சோதனைகள் வரையறுக்கப்பட்ட விவரத்தை அளித்திருந்தன. வேதிச் சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சையின் பக்க விளைவுகளின் அடுக்கு நிகழ்வுகள் மற்றும் தீவிரம், அவை எந்த வரிசை பிரகாரமாய் கொடுக்கப்பட்டிருந்தாலும் ஒரே மாதிரியாக இருந்ததன என்று கிடைக்கப் பெற்ற வரையறுக்கப்பட்ட ஆதாரம் பரிந்துரைக்கிறது. எனினும், இந்த சோதனைகளில் பெண்கள், சராசரியாக 2000-ன் ஆரம்பங்களில் சிகிச்சையளிக்கப்பட்டனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதன் விளைவாக, கதிரியக்க சிகிச்சையின் நவீன வகைகள் மற்றும் வேதிச் சிகிச்சையின் புதிய வகைகள் (டக்ஸ்நெஸ் போன்ற) அல்லது பிற மருந்துகள் ( ஹெர்செப்டின் போன்ற) ஆகியவற்றை இந்த சோதனைகள் மதிப்பிடவில்லை. இந்த மிக சமீபத்திய சிகிச்சைகளை உள்ளடக்கிய தொடர்புடைய சோதனைகளை இந்த திறனாய்வின் எதிர்கால மேம்படுத்துதல்களில் நாங்கள் இணைப்போம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information