இரத்த ஓட்ட தடையால் ஏற்படும் திடீர் பக்கவாதத்திற்கு (acute ischaemic stroke) பியுரரின் (Puerarin)

திறனாய்வு கேள்வி

இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதம் உள்ளவர்களுக்கு பியுரரின் (puerarin) இன் விளைவுகளை மதிப்பிடுவது.

பின்புலம்

இறப்பு மற்றும் பாரதூரமான இயலாமைக்கு பக்கவாதம் ஒரு பொதுவான காரணமாக உள்ளது. புயுராரின்(Puerarin) ஆனது Pueraria லாபட்டா (காட்டு) வேர்களிருந்து பிரித்தெடுக்கப்படும் சீன பாரம்பரிய மருந்தின் ஒரு வகை , இவை பொதுவாக குண்ட்சு (kundzu) என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. மேலும் இவை திடீர் இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கு சீனாவில் பரவலாக பயன்படுத்த படுகிறது. இவை ஆற்றல்மிக்க ஆன்டி ஆக்ஸிடேஷன் பண்புகள் மற்றும் நரம்பு பாதுகாப்பு திறம் கொண்டவை என முந்தைய ஆராய்ச்சிகள் தெரிவித்தன. ஆனால் வழக்கமான பயன்பாட்டிற்கு பரிந்துரைப்பதற்கான தற்போதைய ஆதாரங்கள் இதுவரைத் தெளிவற்றதாகவே உள்ளன.

ஆய்வு பண்புகள்

நாங்கள் ஆகஸ்ட் 2015 வரையிலான ஆய்வுகளைத் தேடி, இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்க வாதத்திற்கு புயுராரின் சிகிச்சை சம்பந்தப்பட்ட, 1574 பங்கேற்பாளர்கள் கொண்ட 20 சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளைச் சேர்த்தோம். பின்தொடர்தலின் இறுதியில் இறப்பு அல்லது சார்புநிலையை பற்றி 2 ஆய்வுகள் மட்டுமே அறிவித்தன. மீதமிருந்த ஆராய்ச்சிகள் பங்கேற்பாளர்களை 1 மாதத்திற்கு குறைவாகவே பின்தொடர்ந்தன.

முக்கிய முடிவுகள்

இந்த மேம்படுத்தப்பட்ட திறனாய்வில் 1574 பங்கேற்பாளர்கள் கொண்ட 20 சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகள் சேர்க்கப்பட்டன; இதில் ஐந்து ஆய்வுகள் புதியன. புயுராரின்( puerarin) கொண்டு சிகிச்சை அளிப்பது, இறுதி பின்தொடரில் , இறப்பு அல்லது சார்புநிலையை குறைக்க வில்லை. புயுராரின் சிகிச்சை முடிவில் நரம்பு குறைபாடுகளை மேம்படுத்தியது. சேர்க்கப்பட்டிருந்த எந்த ஆய்வும் ஆபத்தான எதிர்மறை விளைவுகளை தெரிவிக்கவில்லை.

சான்றின் தரம்

முழுமையற்ற அறிக்கையிடல் முறைகள் மற்றும் குறுகிய கால பின்தொடர் போன்ற காரணங்களால் ஆதாரங்கள் தரம் குறைந்ததாக இருந்தன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information