இங்கு கேள்வி என்ன?
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில், பல பெண்கள் நல்ல ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை உணவையே உட்கொள்கிறார்கள். வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் நுண்ணூட்டச்சத்துகள் ஆகும். இவை உடலுக்கு மிகவும் சிறிய அளவில்தான் தேவைபடுகிறது என்றாலும் அவை உடலின் இயல்பான செயல்பாடு, வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு முக்கிய தேவையாகும். கர்ப்ப காலத்தில், இந்த பெண்கள் பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாகிறார்கள் , மேலும் குழந்தைக்கும் ஊட்டச்சத்து வழங்கவேண்டிய தேவை உள்ளது. அது அவர்களின் உடல்நலம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.
இது ஏன் முக்கியமானது?
பல நுண்ணூட்டச்சத்துக்களை இணைத்து கொடுப்பது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பல நன்மைகளை அடைவதற்கு செலவு குறைந்த வழி என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல நுண்ணூட்டச்சத்துக்களை) இணைத்து கொடுக்கும் போது, பரஸ்பர ஊட்டச்சத்துக்கள் சில நுண்ணூட்டச் சத்துக்கள் உறிஞ்சுதலை குறைக்கும் என்றாலும் பல நுண்ணோட்டசத்துக்களை இணைத்து கொடுப்பதன் மூலம் ஒரு நுண்ணூட்டச் சத்து (ஒற்றை ஊட்டச்சத்து சேர்மானம்) மட்டும் கொடுப்பதை காட்டிலும் ஒரு பெரிய விளைவுகளை ஏற்படுத்துதல் சாத்தியமாகும். அதிக அளவில் சில ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் போது தாய் அல்லது குழந்தைக்கு தீங்கு ஏற்படுத்தலாம்.
நாங்கள் கண்ட ஆதாரம் என்ன?
நாங்கள் காக்றேன் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பின் ஆய்வுகள் பதிவேட்டை (11 மார்ச் 2015) தேடினோம். இந்த ஆய்வு ( 138,538 பெண்கள் ஈடுபட்ட) 19 ஆய்வுகளை உள்ளடக்கியது . ஆனால் (137,791 பெண்கள் ஈடுபட்ட) 17 சோதனைகளிலிருந்து மட்டும் தரவு பங்களிக்கப்பட்டுள்ளது. சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகள் தங்களுடைய உணவுடன் இரும்பு மற்றும் ஃபோலிக்அமிலம் போன்ற நுண்ணூட்டச்சத்து உட்கொண்ட கர்ப்பிணி பெண்களுடன் மருந்தற்ற குளிகை அல்லது இரும்பு சத்து மட்டும் அல்லது அதனுடன் ஃபோலிக் அமிலம் சேர்த்து உட்கொண்ட கர்ப்பிணி பெண்களை ஒப்பிட்டது. ஒட்டுமொத்தமாக பார்த்தோம் எனில் இரும்பு சத்து மட்டும் அல்லது அதனுடன் ஃபோலிக் அமிலம் சேர்த்து உட்கொண்டவர்களை ஒப்பிடும்போது பல- நுண்ணூட்டச்சத்து உணவுச்சோக்கை உட்கொண்ட கர்ப்பிணி பெண்கள் குறைவான எடை குறைவான குழந்தை மற்றும் சிறிய-கருவளர்ச்சியின் வயது குழந்தைகளை பெற்றனர். முக்கிய விளைவுப்யனகளின் ஆதாரம் உயர்ந்த தரம் கொண்டது என்று கண்டறியப்பட்டது.
இதற்கு என்ன அர்த்தம்?
கர்ப்பிணி பெண்கள் இடையே பல-நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் பரவலாகக் காணப்படும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் உடசத்து அளிபதற்கு பதில் பல-நுண்ணூட்டச்சத்து அளிபதற்கு வலுவான அடிப்படை ஆதாரத்தை இந்த திறனாய்வின் கண்டுபிடிப்புகள் மற்ற இதர திட்டமிட்ட திறனாய்வுகள் போல காண்பித்தன.
மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர். குழு