புகைப்பாளர்கள் புகைப்பதை நிறுத்துவதற்கு மற்றும் புகை பிடிக்காதவர்கள் புகைத்தலை தவிர்ப்பதை தொடரவும் ஊக்குவிக்க நோக்கம் கொண்ட வெகுஜன ஊடக சிகிச்சை தலையீடுகள், தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள், விளம்பர பலகைகள், துண்டுப் பிரசுரங்கள், அல்லது கையேடுகள் ஆகியவற்றை உள்ளடக்கும். இவை, ஒரு பல்கூட்டான சிகிச்சை தலையீடுகளின் தொகுதியின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படும் போது, புகைப்பிடித்தலின் குறைவிற்கு பங்களிக்கிறது என்று தெரிகிறது, ஆனால், இந்த நிகழ்முறையில், அவற்றின் சுயாதீன பங்கையோ மற்றும் மதிப்பையோ நிர்ணயிப்பது கடினமாக உள்ளது. இந்த திறனாய்வில், பதினோரு ஆய்வுகள் உள்ளடங்கின, ஆனால் அவை வெவ்வேறான அளவிடை மற்றும் தரம் கொண்டதாய் இருந்தன. புகைபிடித்தலின் பரவலை அறிக்கையிட்ட ஒன்பது ஆய்வுகளில், ஐந்து பெரிய ஆய்வுகள், புகைப் பிடிக்கும் நடத்தையில் சில நேர்மறையான மாற்றங்களைக் கண்டன. புகைக்கப்பட்ட புகையிலையின் அளவை அளவிட்ட ஏழு ஆய்வுகளில், மூன்று பெரிய ஆய்வுகள், குறைதல்களைக் கண்டன. புகை பிடித்தலை விட்டு விட்ட வீதத்தின் அளவிட்ட ஏழு ஆய்வுகளில், நான்கு ஆய்வுகள், புகைப்பிடித்தலின் தவிர்ப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகளைக் அறிக்கையிட்டன, ஆனால், புகைத்தலுக்கு, புகைப்பாளகளுக்கு மற்றும் புகைப்பிடிப்பதை விடுதலின் முயற்சிகளுக்கு ஆய்வுகள் வெவ்வேறு விதமான பொருள் விளக்கத்தை பயன்படுத்தியதால், இந்த கண்டுப்பிடிப்பை அர்த்தம் கொள்ளுதல் கடினமாக உள்ளது. வெகுஜன ஊடக சிகிச்சை தலையீடுகளின் தீவிர அளவு மற்றும் கால அளவு, திறனின் மீது பாதிப்பைக் கொண்டிருக்கலாம், ஆனால், பின்-தொடர்தல் காலத்தின் அளவு மற்றும் சமுகத்தினுடைய உடன்நிகழ்வுகள் இதை சரி பார்ப்பதைக் கடினமாக்க கூடும். பிரச்சாரங்களின் விளைவுகள் மற்றும் வயது, கல்வி, இனம், அல்லது பாலினம் இடையே எந்த ஒரு நிலையான அமை முறைகளையும் நாங்கள் காணவில்லை.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.