இன்சுலின் சுரத்தலிலுள்ள குறைபாடானது 2ம் வகை வெல்லமுள்ள நீரிழிவு நோயின்முக்கிய அம்சமாகும்.மெக்லிட்டினைட் வகை சார்ந்த பொருட்கள் (Meglitinide analogues) (“மெக்லிட்டினைட்டுக்கள்”) கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும், வாய் மூலம் உள்ளெடுக்கப்படும், நீரிழிவிற்கெதிரான ஒரு வகையான மருந்துகளாகும். இவற்றிற்கு விரைவான, குறுகிய நேரம் நீடிக்கும் இன்சுலின் வெளியீட்டை நிகழ்த்தும் ஆற்றல் உண்டு என்பதை இம் மருந்துகளின் வகைக்குரித்தான குணவியல்புகள் கோடிட்டுக் காட்டுகின்றன. ரெபாகிளினைட்(Repaglinide) மற்றும் நேற்றகிளினைட்(Nateglinide) எனும் இரு மெக்லிட்டினைட் சார்புபொருட்கள் தற்போது மருத்துவப் பயன்பாட்டில் உள்ளன. இம் மீளாய்வில் மொத்தமாக 15 ஆய்வுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8 ஆய்வுகள் ரெபாகிளினைட்டினை ஆய்விற்குரிய மருந்தாகவும், 5 ஆய்வுகள் நேற்றகிளினைட்டினை ஆய்விற்குரிய மருந்தாகவும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரு ஆய்வுகள் இவ்விரு மருந்துகளையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தமாக 3871 பேர் இந்த 15 ஆய்வுகளிலும் பங்குபற்றியுள்ளதோடு, பெரும்பாலான ஆய்வுகள் 10 தொடக்கம் 24 கிழமைகள் நீடித்தன (ஒரு ஆய்வின் காலப்பகுதி 52 கிழமைகளாக காணப்பட்டது).
இறப்புக்களில் அல்லது நீரிழிவு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மெக்லிட்டினைட்டுக்களின் பாதிப்பானது எந்தவொரு ஆய்வுகளிலும் அறிக்கையிடப்படவில்லை. மெக்லிட்டினைட்டுக்களினை வெற்றுமருந்துகளுடன்ஒப்பிட்டு நடத்தப்பட்ட11 ஆய்வுகளில் ரெபாகிளினைட் மற்றும் நேற்றகிளினைட் ஆகிய இரண்டுமே குருதி வெல்ல மட்ட கட்டுப்பாட்டை மேம்படுத்தின. மெற்போமின் எனும் மற்றொரு வாய் மூலம் உள்ளெடுக்கப்படும் நீரிழிவிற்கெதிரான மருந்துடன் ஒப்பிடும் போது மெக்லிட்டினைட்டுக்களினைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்டோரில் உடல் நிறையதிகரிப்பு கூடிக் காணப்பட்டது (மூன்று மாத காலப்பகுதியில் மூன்று கிலோகிராம் நிறை வரையில்). இங்கு வயிற்றோட்டம் குறைந்தளவு சந்தர்ப்பங்களிலும், குளுக்கோசு மட்டக் குறைவு(Hypoglycaemia) அதிகளவு சந்தர்ப்பங்களில் ஏற்பட்டாலும் மிக அரிதாகவே உதவி தேவைப்படும் அளவிற்கு கடுமையானதாகவும் ஏற்பட்டன. மெற்போமினுக்கு சம அளவான வீரியம் கொண்ட, வாய் மூலம் உள்ளெடுக்கப்படுகின்ற குருதிக் குளுக்கோசு மட்டத்தைக் குறைக்கும் ஒரு மாற்று மருந்தாக மெக்லிட்டினைட்டுக்கள் இருக்க முடிவதோடு, மெற்போமினின் பக்கவிளைவுகளைத் தாங்கிக் கொள்ளப்பட முடியாதுள்ள போது (விசேடமாக நீடித்த வயிற்றோட்டம்) அல்லது மெற்போமின் பாவிக்க முடியாத சந்தர்ப்பங்களில் இதனைப் பயன்படுத்தவும் முடியும். இருப்பினும், முக்கியமான நீண்ட கால விளைவுகளில், விசேடமாக இறப்புக்களில், மெக்லிட்டினைட்டுக்கள் என்ன விதமான பாதிப்பைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுவதற்கு இதுவரை எவ்வித ஆதாரங்களும் இல்லை. இதுவரையில் பக்கவிளைவுகளைப் பொறுத்தமட்டில் மெக்லிட்டினைட்டுக்களுடனான அனுபவம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. ஏனையகொக்ரேன்மீளாய்வுக்குழுக்களிடமிருந்துகிடைக்கும்முடிவுகள்2ம் வகை வெல்ல நீரிழிவு நோயின் மேலாண்மையில் மெக்லிட்டினைட்டுக்களின் ஆற்றல்மிகு பங்களிப்பைப் பற்றி மேலதிக தகவல்களைத் தரக் கூடும்.
மொழிபெயர்ப்பு: தனஞ்செயன் சஞ்சயன் மற்றும் சி.இ.பி.ஏன்.அர்