திறனாய்வு கேள்வி
குத்தூசி சிகிச்சை, மெல்லிய ஊசிகளைக் கொண்டு உடலின் சில குறிப்பிட்ட இடங்களில் செலுத்தப்படும் ஒரு மருந்தில்லா சிகிச்சையாகும். பக்கவாதம் வந்து ஒரு மாதமோ அதற்கு மேலும் ஆனவர்களுக்கு அன்றாட வாழ்க்கையின் செல்யல்பாடுகள் செய்வது, அசைவுகள் மற்றும் வாழ்க்கை தரத்தில் மேம்பாடு அடைய நுண்துளை (குத்தூசி) மருத்துவம் உதவுமா ஏன்று நாங்கள் தெரிந்துகொள்ள விரும்பினோம்.
பின்னணி
இறப்பு மற்றும் கடுமையான இயலாமைக்கு பக்கவாதம் ஒரு பொதுவான காரணமாக உள்ளது. நுண்துளை (குத்தூசி) மருத்துவம் ஒரு எளிய, மலிவான மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறை. இதனை சீனாவில் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர் மேலும் மேலைநாடுகளில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. வழக்கமான பயன்பாட்டிற்கு நுண்துளை (குத்தூசி) மருத்துவம் பயன்படுத்தலை சிபாரிசு செய்ய நம்பகமான ஆதாரங்கள் உள்ளனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஆய்வு பண்புகள்
இந்த திறனாய்வில் சேர்த்துக்கொள்ள ஜூலை 2015 வரை நாங்கள் 31 ஆய்வுகளை கண்டறிந்தோம். பக்கவாதம் வந்து ஒரு மாதத்திற்கு மேலான 2257 பங்கேற்பாளர்களை இதில் சேர்க்கப்பட்டுள்ளது. போலி நுண்துளை (குத்தூசி) மருத்துவம் அல்லது நுண்துளை (குத்தூசி) மருத்துவம் செய்யாதவர்களுடன் ஒப்பிடுகையில் நுண்துளை (குத்தூசி) மருத்துவம் மீட்டெழலை ஊக்குவிக்குமா என்பதை இவை ஆராய்ந்தன. தினசரி நடவடிக்கைகள் (அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் ADL) நரம்பியல் சம்பந்தப்பட்ட செயல்பாட்டு திறன், அசைவுகள், அறியும் ஆற்றல் (cognition), மனச்சோர்வு, விழுங்குதல், வலி, மற்றும் வாழ்க்கை தரம் போன்ற விளைவுபயன்கள் இதனுள் அடங்கும். பெரும்பாலான (29/31) ஆய்வுகள் சீனாவில் நடத்தப்பட்டன. இந்த ஆராய்ச்சிகள் பக்கவாதம் வந்த பின்இருந்த காலம், உபயோகித்த குறிப்பிட்ட யுக்தி மற்றும் நுண்துளை (குத்தூசி) மருத்துவம் செய்த கால நிகழ்விடைவெளி ஆகியவற்றைப் பொறுத்து ஆய்வுகள் குறிப்பிடத்தக்க மாற்றமுள்ளவையாக இருந்தன.
முக்கிய முடிவுகள்
நுண்துளை (குத்தூசி) மருத்துவம் நரம்பியல் சம்பந்தப்பட்ட செயல்பாட்டு திறன் மற்றும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் மேம்படுத்தும் என்பதற்கான சில ஆதாரங்கள் எங்களுக்கு கிட்டியது. எனினும், இந்த முடிவுகள் குறைந்த தர ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை. இறப்பு அல்லது மருத்துவமனை நிறுவன பராமரிப்பு தேவைபடல் போன்ற வற்றை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை மேலும் தீவிரபக்க விளைவுகள் எதுவும் தெரிவிக்கப் படவில்லை.
ஆதாரங்களின் தரம்
ஆராய்ச்சிகள் பற்றிய விவரங்களை வெளியிடுதலில் உள்ள குறைபாடுகளின் நிமித்தம் ஆதாரங்களின் தரத்தை நம்பகமாக தீர்மானிக்க கடினமாக இருந்தது. எனவே, நாங்கள் இந்த முடிவுகள் பெரும்பான்மையாக குறைவாக அல்லது மிகவும் குறைவான தரம் கொண்டவை என்று விவரித்துள்ளோம்.
மொழிபெயர்ப்பு: சி.இ.ப.ஏன்.அர்.குழு