அறுவை சிகிச்சை காலத்தின் போது நோயாளிகளின் சிறுநீரகங்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் எந்த ஒரு நடவடிக்கைகளும் நன்மையளிக்கும் என்பதை எந்த ஆதாரமும் சுட்டிக்காட்டவில்லை.

ஒரு அறுவை சிகிச்சையின் போது, நேரடியாகவோ மற்றும் நேரல்லாத காயத்தின் விளைவாக சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம். இதற்கான காரணங்கள் பலவாகும், மற்றும் அறுவை சிகிச்சையினால் உடலியல் செயல்பாட்டில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் மற்றும் அத்தகைய மாற்றத்திற்கு உடலினுடைய பிரதி வினை ஆகியவற்றை உள்ளடக்கும். அறுவை சிகிச்சை காலத்தின் போது சிறுநீரகங்கள் பாதிப்படைவது, குறிப்பிடத் தகுந்த வகையில் நோயுற்ற நிலை மற்றும் இறப்போடு தொடர்பு கொண்டதாகும். இந்த புதுப்பிக்கப்பட்ட காக்ரேன் திறனாய்வு, 4378 பங்கேற்பாளர்களைக் கொண்ட 72 சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளைக் (தரவு தேடல் ஆகஸ்ட் 2012 வரை) கண்டது; சிகிச்சை தலையீடுகள் பெரும்பாலும், மருந்தியல் சிகிச்சை தலையீடுகள் (டோபமைன் மற்றும் அதின் ஒப்பு மருந்துகள், சிறுநீர் நீக்க ஊக்கிகள்,கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ், அஞ்சியோடென்சின்-மாற்றல் நொதிப் பொருள் தடைப்பான்கள், N -அசிடைல் சிச்டேன், ஏட்ரியால் நட்ரியுரெடிக் பெப்டைட், சோடியம் பைகார்போநேட், ஆண்டிஆக்ஸ்சிடண்ட்ஸ், மற்றும் எரித்ரோபோய்டின் போன்றவற்றை உட்செலுத்துதல்) அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நீர் சேர்க்கை திரவங்கள். சிறு நீரகங்களுக்கு ஏதும் சாத்தியமான பாதிப்பு இருந்ததா என்பதை கண்டறிய, அறுவை சிகிச்சைக்கு பின் ஏழு நாட்கள் வரை சிறு நீரக செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு நாங்கள் முயற்சி செய்தோம்.

அறுவை சிகிச்சை காலத்தின் போது நோயாளிகளின் சிறுநீரகங்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் எந்த ஒரு நடவடிக்கைகளும் நன்மையளிக்கும் என்பதை கிடைக்கப் பெற்ற சீரற்ற சோதனைகளிலிருந்து எந்த தெளிவான ஆதாரமும் பரிந்துரைக்கவில்லை. ஏற்கனவே- சிறு நீரக பாதிப்பை கொண்டிருந்த நோயாளிகளை உடைய 14 ஆய்வுகள் மற்றும் நல்ல செயல்முறையியல் தரத்தைக் கொண்டிருந்தன என்று கருதப்பட்ட 24 ஆய்வுகளிலும் இந்த கண்டுப்பிடிப்புகள் உண்மையாய் இருந்தன. இறப்பு மற்றும் கடுமையான சிறு நீரக பாதிப்பு ஆகியவை இந்த ஆய்வுகளின் முதன்மை விளைவுகளாக இருந்தன. குறைந்த ஒரு தலை சார்பு அபாயத்தைக் கொண்டிருந்த ஆய்வுகளில் அறிக்கையிடப்பட்ட இறப்புகளில்,சிகிச்சை தலையீடு மற்றும் கட்டுப்பாட்டு குழுக்கள் மத்தியில் வித்தியாசம் இல்லை (சமமின்மை விகிதம் (ஆட்ஸ் ரேசியோ, ஓஆர்) 1.01, 95% நம்பக இடைவெளி (கான்பிடன்ஸ் இண்டர்வல்) 0.52 முதல் 1.97 வரை) அல்லது கடுமையான சிறு நீரக பாதிப்பிற்கு (ஓஆர் 1.05, 95% நம்பக இடைவெளி 0.55 முதல் 2.03 வரை). கண்டுப்பிடிப்புகளின் சுருக்கம் இதே மாதிரியான அர்த்தத்தை அளித்தது. ஆதலால், தற்போது பயன்படுத்தப்படும் சிகிச்சை தலையீடுகள் எதுவும் அறுவை சிகிச்சை காலத்தின் போது சிறுநீரகங்களை பாதுகாப்பதற்கு உதவவில்லை, அல்லது அவை அதிகரித்த தீங்கை ஏற்படுத்தவில்லை என்று ஆதாரம் பரிந்துரைக்கிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information