கருச்சிதைவு தடுப்பதற்கு கர்ப்ப காலத்தில் படுக்கை ஓய்வு

படுக்கை ஓய்வு கருச்சிதைவை தடுப்பதற்கு உபயோகமானது என்று சொல்ல போதுமான ஆதரங்கள் இல்லை.

கருச்சிதைவு என்பது கர்ப்ப காலத்தில் 23 வாரங்களுக்கு முன் குழந்தையை இழப்பது. மேலும் இது பெற்றோர்களுக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தும். அதை தடுக்க பயன்படுத்தப்படும் பொதுவான சிகிச்சை படுக்கை ஓய்வாக இருக்க கூடும். 84 பெண்கள் பங்கேற்பாளர்கள் கொண்ட இரண்டு ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய இந்த திறனாய்வு, படுக்கை ஓய்வு கருச்சிதைவை தடுக்க உதவுகிறது என்பதை சொல்ல நல்ல தரமான ஆராய்ச்சிகள் இல்லை என்று கண்டறிந்தது. கருச்சிதைவு ஏற்பட ஆபத்து அதிகரிக்கமாக இருக்கும் பெண்களுக்கு அவர்களின் தனிப்பட்ட தேவைக்கு ஏற்ப கவனிப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: க.ஹரிஓம், வை. பிரகாஷ் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information