ஆஸ்துமா கொண்ட மக்களுக்கு, உளவியல் சிகிச்சை தலையீடுகள் உதவக் கூடும் என்று சிலரால் எண்ணப்படுகிறது. உளவியல் சிகிச்சை தலையீடுகளின் மேலான இலக்கியத்தில், ஆஸ்துமா கொண்ட வயது வந்தவர்களுக்கு, உளவியல் சிகிச்சை தலையீடுகளை குறிப்பாக வழங்கப்பட்டதின் விளைவுகளை கண்ட தகுதி வாய்ந்த ஆய்வுகளை நாங்கள் முறைப்படி தேடினோம். கண்டுப்பிடிக்கப்பட்ட ஆய்வுகள், வெவ்வேறு விதமான சிகிச்சைகளை ஆராய்ந்தன மற்றும் வெவ்வேறு விதமான உடலியல் மற்றும் உளவியல் விளைவுகளை அளந்தன; இந்த காரணங்களுக்காக, அவற்றின் முடிவுகளை எளிதாக இணைக்க முடியாமல் போனது. எனினும், வாழ்க்கைத் தரத்தின் மீதான புலனுணர்வு-நடத்தை பயிற்சியின் (காக்னிடிவ் பிஹேவியரல் ட்ரைனிங், சிபிடி) விளைவு, பிஇஎப் மீதான பயோ-பீட் பாக் மற்றும் பிஇஎப் மற்றும் எப்வி 1மற்றும் மருந்து பயன்பாட்டின் மீதான தளர்வு சிகிச்சையின் விளைவை தீர்மானிக்க பகுப்பாய்வுகள் செய்யப்படலாம். கிடைக்கப்பெற்ற ஆய்வுகள் குறைந்த அளவிலான மக்களைக் கொண்டு முடிக்கப்பட்டுள்ளன, மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட்ட விதத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். ஆஸ்துமா கொண்ட மக்களில் உளவியல் சிகிச்சை தலையீடுகள் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்துவதில் திறன் மிக்கவையாக இருக்குமா என்பது தெரிவதற்கு முன்னால் அதிக எண்ணிக்கையிலான மக்களை கொண்ட மற்றும் மேம்பட்ட வடிவமைப்பு தேவைகள் கொண்ட அதிக ஆராய்ச்சி தேவைப்படுகின்றன.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.