ஆஸ்துமாவின் போது, தசை இறுக்கங்கள் மற்றும் வீக்கத்தினால் காற்றுக் குழாய்கள் சுருங்கும். மூச்சுக் குழாய்த் தளர்த்தி மருந்துகள் ( நிவாரண மூச்சிழுப்பான்கள்) தசைகளை தளர்த்தி மற்றும் காற்றுக் குழாய்களை விரிவாய் திறப்பதற்கும் மற்றும் கார்ட்டிகோ-ஸ்டீராய்டுகள் வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. தசைகளை தளர்த்தவும் மற்றும் வீக்கத்திற்கும் மெக்னீசியம் ஸல்பேட் ஒரு மருந்தாக காணப்படுகிறது. நாளங்கள் வழியாக சொட்றேற்றல் மூலம் இது செலுத்தப்படலாம். மூச்சுக் குழாய் தளர்த்திகளுடன் மெக்னீசியம் ஸல்பேடை நாளங்கள் வழியாக பயன்படுத்தும் போது, அது பாதுகாப்பானதாகவும் மற்றும் தீவிர ஆஸ்துமா பாதிப்புகள் உள்ள மக்கள் அல்லது மூச்சுக் குழாய் தளர்த்திகள் வேலை செய்யாத மக்களுக்கும் பயனளிப்பதாகவும் உள்ளதென சோதனைகளின் இந்த திறனாய்வு கண்டது.
மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்