மெனிட்டால் ஒரு சர்க்கரை ஆல்கஹால் கரைசல், அது சிலவேளைகளில் மூளைக் காயத்திற்கு பின் ஏற்படும் மூளை வீக்கத்தை திறன்பட குறைக்கும். இருப்பினும் கடும் தலைக் காயத்திற்கு திறன் வாய்ந்த சிகிச்சையா என்பது தெளிவாக தெரியவில்லை. மெனிட்டாலை அதிகப்படியாக வழங்குதல் தீங்கு விளைவிக்கலாம், அவை இரத்த நாளம் வழியாக மூளையை சென்றடைந்து தலையோடு அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் அது மூளை வீக்கத்தை மோசமாக்கும். ஆய்வு ஆசிரியர்கள், மருத்துவ ஆய்வுகளைத் தேடி தலை காயத்திற்கு பின்னர் வரும் மூளை வீக்கத்தை குறைக்க மற்ற சிகிச்சை உத்திகளுடன் மெனிட்டால் ஒப்பிட் நான்கு சமவாய்ப்பிட்டு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் கண்டறியப்பட்டது. ஒரு ஆராய்ச்சி உள்மண்டை அழுத்தத்தைப் பொருத்து மெனிட்டால் சிகிச்சையுடன் வழக்கமான சிகிச்சையுடன் (உள்மண்டை அழுத்தத்தை அளக்காமல் சிகிச்சை அளிப்பது) ஒப்பிட்டுப்படிருந்தது. ஒரு ஆராய்ச்சி மெனிட்டால் சிகிச்சையும் பென்டோபார்பிடால்லை சிகிச்சையுடன் ஒப்பிட்டுப்படிருந்தது. ஹைபெர்டோனிக் உப்புக் கறைசல் (அதிக அடர்த்தியுடன் உப்பு கரைசல்) சிகிச்சைக்கு மெனிட்டால் கொண்டு சிகிச்சைக்கு ஒரு ஆராய்ச்சி ஒப்பிட்டுப்படிருந்தது. மருத்துவமனை வருகைக்கு முன் மருந்தற்ற குளிகையோடு (ஒரு செயலற்ற 'போலி' கறைசல்), மெனிட்டால் சிகிச்சையுடன் ஒரு ஆராய்ச்சி ஒப்பிட்டது. அதிகரித்த உள்மண்டை அழுத்ததிற்கு மெனிட்டால் சிகிச்சை, பென்டோபார்பிடால்லை சிகிச்சையுடன் ஒப்பிட்டுகையில்இறப்புக்கான சாத்தியக்கூறுகள் மெனிட்டாலில் குறைகின்றன என்று இந்த திறனாய்வில் கண்டறியப்பட்டது. இதற்கு முரணாக, மெனிட்டால் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சை, ஹைபெர்டோனிக் உப்புக் கரைசளுடன் ஒப்பிடுகையில் அது இறப்புக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கின்றன என்று கண்டறியப்பட்டது. உள்மண்டை அழுத்தத்தை பொருத்து சிகிச்சை அளிக்கப்படும்போது, வழக்கமான சிகிச்சையை விட மெனிட்டால் சிகிச்சை சிறிய அளவில் நன்மை பயக்கும் என்று இந்த திறனாய்வில் அறியப்பட்டது. மருத்துவமனைக்கு வரும் முன் மெனிட்டால் அளிக்கப்படுவதின் திறனை அறிவதற்கு போதுமான தரவுகள் இல்லை என்று இந்த திறனாய்வில் அறியப்பட்டது.
மொழிபெயர்ப்பு: க.வேணு வேந்தன் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு