இடைவிட்டு நிகழ்கிற கால் இறுக்க வலிக்கான வைட்டமின் E

'இடைவிட்டு நிகழ்கிற இறுக்க வலி' என்பது உடற்பயிற்சியினால் உண்டாகி மற்றும் ஓய்வினால் குறையக் கூடிய ஒரு இறுக்கம் மிகுந்த வலியாகும். இது கெண்டைக்கால் தசை மற்றும் கால் தசைகளில் பற்றாக்குறையான இரத்த ஓட்டத்தின் காரணத்தினால் ஏற்படும். இது, தமனிகளில் கொழுப்பு படிமங்கள் படிந்து இரத்த ஓட்டத்தை தடை செய்யும் தமனியில் கொழுப்பு படிதல் நோயின் அறிகுறியாகும். வைட்டமின் E-ஐ எடுத்துக் கொள்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மற்றும் உடலானது தன்னுள் ஏற்படும் பாதிப்பை சரி செய்து கொள்ளும் திறனையும் மேம்படுத்தக் கூடும் என பரிந்துரைக்கப்படுகிறது. இடைவிட்டு நிகழ்கிற இறுக்க வலியை வைட்டமின் E குறைக்கும் என்பதை காட்ட அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது என சோதனைகளின் இந்த திறனாய்வு கண்டது. பாதகமான விளைவுகள் எதுவும் காணப்படவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information