கர்ப்பக்காலத்தின் போது மக்னீசியம் உபச்சத்து உணவுத் திட்ட முறை நன்மையளிக்கும் என்பதற்கு போதுமான உயர்-தர ஆதாரம் இல்லை.

அநேக பெண்கள், குறிப்பாக அனுகூலக் குறைவான பின்புலங்களிலிருந்து வருவோர், பரிந்துரைக்கப்பட்ட அளவுகளுக்கு குறைவான மக்னீசியம் உட்கொள்ளுதல்களை கொண்டிருப்பர். கர்ப்பக்காலத்தின் போது மக்னீசியம் உபச்சத்து, சிசுவின் வளர்ச்சி தடை மற்றும் முன்-பேறுகால வலிப்பு நோய் (கர்ப்பக் கால உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் புரதம்) மற்றும் அதிகரித்த பிறப்பு எடை ஆகியவற்றை குறைக்கக் கூடும். கர்ப்பக்காலத்தின் போது தாய், பிறந்த சிசு மற்றும் குழந்தை விளைவுகளின் மீது மக்னீசியம் உபச்சத்தின் விளைவுகளை மதிப்பிட இந்த திறனாய்வு நோக்கம் கொண்டுள்ளது.

9090 பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளை உள்ளடக்கிய 10 சீரற்ற சோதனைகளை இந்த திறனாய்வில் நாங்கள் இணைத்தோம். இந்த சோதனைகள் ஒட்டுமொத்தமாக, குறைந்தது முதல் மிதமானது வரையான தரத்தை கொண்டிருந்தன. கர்ப்பக்காலத்தின் போது மக்னீசியம் உபச்சத்து பெற்ற பெண்களுக்கு பிறந்த குழந்தைகளின் குழுவோடு கர்ப்பக்காலத்தின் போது மக்னீசியம் உபச்சத்து பெறாத பெண்களுக்கு பிறந்த குழந்தைகளின் குழுவை ஒப்பிடுகையில், கர்ப்பக்கால இறப்பு அபாயத்தில் (இறந்தே பிறத்தல், மற்றும் மருத்துவமனை வெளியேற்றத்திற்கு முன்னான குழந்தைகளின் இறப்பு) எந்த வித்தியாசமும் இல்லை. கருக்கால வயதிற்கு ஒப்பிடுகையில் சிறிய அளவில் பிறக்கும் குழந்தைகள், மற்றும் தாய்மார்களுக்கான முன்-பேறுக் கால வலிப்பு ஆகியவற்றின் அபாயத்தை மக்னீசியம் உபச்சத்து குறைக்கவில்லை.

கர்ப்பக்காலத்தின் போது மக்னீசியம் உபச்சத்து நன்மையளிக்கும் என்பதற்கு நம்பத் தகுந்த ஆதாரத்தை நாங்கள் காணவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information