5 முதல் 7 % உரி தோலழற்சி நோய்உள்ளவர்களுக்கு கீல்வாத பாதிப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. அவை சில நோயாளிகளில் கணிசமான இயலாமையை உண்டுபண்னும்.
உரி தோலழற்சி கீல்வாதத்திற்கு அளிக்கப்படும் சிகிச்சைகளின் (sulfasalazine, auranofin, etretinate, fumaric acid, IMI gold, azathioprine, methotrexate) பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை மதிப்பீடு செய்வதே இந்த திறனாய்வின் நோக்கம். இந்த ஆய்வுகளில் உரி தோலழற்சி கீல்வாதம் உள்ள நோயாளிகளில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு பரென்டிறல் மெதொடிரெக்ஸேட் (Parenteral methotrexate) மற்றும் சல்பாசலசின் (sulfasalazine) முக்கியமான பயன் அளித்தது. மற்ற சிகிச்சைமுறைகள் மற்றும் நச்சுத்தன்மையை மதிப்பீடு செய்ய போதுமான தரவுகள் இல்லை. azathioprine, oral methotrexate, etretinate, மற்றும் colchicineகளின் பலாபலனை அறிய பல மையங்களில் செய்யப்படும் ஆய்வுகள் வரும் காலத்தில் தேவை.
மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு