பக்கவாத நோயாளிகளை அதில் நிபுணத்துவம் கொண்ட செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் இதர சிகிச்சையாளர்கள் ஒரு அணியாக ஒருங்கிணைந்து பேணுவதே ஒருஅமைப்புசார் பக்கவாதம் சிகிச்சைப் பிரிவு ஆகும் . 5855 பங்கேற்பாளர்கள் கொண்ட 28 ஆய்வுகள் இந்த திறனாய்வு,இந்த விதமான பேணுகை பெறும் நோயாளிகளுக்கு , பக்கவாதத்திற்கு பின் உயிர் பிழைப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளதென்றும், அவர்கள் வீட்டிற்கு திரும்பி சென்று சுதந்திரமாக பிறர் துணையின்றி தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள்ள முடிகிறது என்றும் கண்டறிந்தது . பல்வேறு வகையான பக்கவாதம் சிகிச்சைப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு உள்ளன . அர்ப்பணிப்பு அடிப்படையிலான மருத்துவ கூடங்களிலிருந்துதான் (வார்டு) சிறந்த முடிவுகள் வருவதுபோல் தெரிகிறது.
If you found this evidence helpful, please consider donating to Cochrane. We are a charity that produces accessible evidence to help people make health and care decisions.
மொழிபெயர்ப்பு குறிப்புகள்:
மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு