கர்ப்பபிணி பெண்களிடையே மலேரியா தடுக்க வழக்கமான மலேரியா எதிர்ப்பு மருந்துகள் உட்கொள்வதின் விளைவு

கர்ப்பம் மலேரியா ஆபத்தினை அதிகரிக்கிறது. இது குறிப்பாக முதல் அல்லது இரண்டாவது கர்ப்ப காலத்தில், தாய் மற்றும் குழந்தை இருவரின் மோசமான சுகாதார விளைவுகளோடு தொடர்புடையதாக உள்ளது. இக்காரணத்தால் மலேரியா பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பெண்கள் கர்ப்பகாலத்தில் உறங்கும் பொழுது கொசுவலை பயன்படுத்தவும் பாதுகாப்பான மலேரியா தடுப்பு மருந்துகளை கர்ப்பகாலம் முழுவதும் உபயோகிக்கவும் வலியுறுத்தப்படுகிறது. இது வேதியியல் நோய் தடுப்புமுறை (Chemo Prevention) என்று கூறப்படுகிறது.

இந்த காக்ரேன் திறனாய்வு மலேரியாவுக்கு எதிரான அனைத்து மருந்தளிப்பு திட்ட முறைகளையும் மருந்தற்ற குளிகை மருந்து திட்ட முறைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்தது. இந்த திறனாய்வு ஆசிரியர்கள் வேதியியல் நோய் தடுப்பு முறையின் ஒட்டுமொத்த விளைவுகளையும் தொகுத்துள்ளனர். 1957 முதல் 2008 வரையிலான 17 ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு இந்த மறுசீராய்வு தொகுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு தங்கள் முதல் அல்லது இரண்டாவது கர்ப்ப காலத்தில் , இரசாயன முறையில் மலேரியா தடுப்புமுறை (chemoprevention) மிதமானது முதல் தீவிர இரத்த சோகை வரை தடுக்கிறது (உயர் தர சான்று); மற்றும் அப்பெண்களின் ரத்தத்தில் மலேரியா ஒட்டுயிரி தென்படாமலும் பாதுகாக்கிறது.(உயர் தர சான்று  ); மற்றும் அப்பெண்களின் ரத்தத்தில் மலேரியா ஒட்டுயிரி தென்படாமலும் பாதுகாக்கிறது.(உயர் தர சான்று ). இது மலேரியா நோயையும் தடுக்கிறது. அது பிரசவ மரணத்தை தடுக்கிறதா என்று அறிய மிகவும் பெரிய அளவிலான ஆய்வுகள் தேவைப்படுவதால் எங்களால் அதனை அறிந்துக் கொள்ளமுடியவிலை.

பச்சிளங்குழந்தைகள் பொருத்தமட்டில் இந்த மலேரியா வேதியியல் நோய் தடுப்பு முறை இக்குழைந்தைகளின் சராசரி பிறப்பு எடையை அதிகரிக்கும் (மிதமான தரம் கொண்ட ஆதரம்) மற்றும் எடை குறைந்த பிறப்புகளின் எண்ணிகையை குறைத்துள்ளது ( மிதமான தர சான்று  ).இந்த தடுப்பு முறை ஒருவார, ஒருமாத மற்றும் ஒரு வருட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்கின்றது என்று உறுதியாக கூற இயலவில்லை. அதற்கும் பெரிய அளவிலான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ஹரிகணேஷ் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information