கடுமையானபக்கவாதத்தில், மூளைவீக்கத்தினால் ஏற்படும் முடமாக்கக்கூடிய பக்கவிளைவுகளை, கிளைசரால்குறைக்கும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை. மூளைவீக்கம் என்பது பக்கவாதத்திற்குப்பின் விரைவில் மரணம் ஏற்படவும், நெடுநாள் முடமாகிப் போவதற்கும் முக்கியமானதொரு காரணமாக இருக்கிறது. (இது திடிரென மூளையின் ரத்தநாளங்களில் ஏற்படும், அடைப்பினாலோ அல்லது மூளையின் ரத்தநாளங்களிலோ அல்லது மூளைக்கு செல்லும் ரத்தநாளங்களிலோ உண்டாகும் வெடிப்பு மற்றும் ரத்தக்கசிவினால் ஏற்படுவதாகும்). ஒரு 10% கிக்ளைசரால் கரைசல், பக்கவாதத்தில் மூளைவீக்கத்தை பெரிய அளவில் குறைக்கலாம், அதன் மூலம் சீக்கிரமாக இறந்துபோதல் மற்றும் நெடுநாள் முடமாகிப் போதலையும் அதுகுறைக்கும். கிக்ளைசரால் பக்கவாதத்தில் உயிர்பிழைத்திருத்தலை, கொஞ்சகாலத்திற்கேனும் முன்னேற்றம் அடையச்செய்யும் என்பதற்கு இந்தஆய்வு போதிய ஆதாரமளிக்கக்கூடியதாகவும், ஆனால் முடமாகிப்போதலை தவிர்க்கக்கூடிய அளவிற்கு இந்த ஆதாரம் உதவுமா என்பதற்கான முடிவு எட்டமுடியாதவையாகவும் உள்ளது. கிக்ளைசரால் சிகிச்சை தீங்கு விளைவிக்கக் கூடியபாதிப்புகளை அடிக்கடி உண்டாக்கவில்லை, ஆனால் சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகள் தங்கள் சிறுநீரில் ரத்தம் கலந்து வருவதை கண்டறிந்தார்கள் (க்ளைசரால் சிகிச்சையை நிறுத்தியதும்,அதுவும் நின்றுவிட்டது). இதில் மேலும் ஆராய்ச்சிகள் தேவை.
மொழிபெயர்ப்பு: ராம் குமார் மற்றும் சி.இ.ப.ஏன்.அர். குழு