பைபிரினாக்கி குறைப்பு செய்யும் காரணிகள் பயன் அளிப்பதாக உள்ளன என்று உறுதிபட எதிர்பாக்கபட்டாலும் கடுமையான (acute) இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு இது நிரூபிக்கப்படவில்லை . மூளையில் ஒரு தமனியின் இரத்த ஓட்டத்தை குருதியுறை தடுப்பதால் பொதுவாக பக்கவாதம் நிகழ்கிறது. பைபிரினாக்கி குறைப்பு செய்யும் காரணிகள் குருதியுறைவை நீக்கி இரத்த ஓட்டத்தை சீர் செய்து அதன் மூலம் பக்கவாதத்திற்குப் பிறகான மீட்சியை மேம்படுத்தும். இரத்த அடர்த்தியைக் (பாகுத்தன்மையை) குறைத்து, அதன்முலம் மூளையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கவும் இந்த பைபிரினாக்கி குறைப்பு செய்யும் காரணிகள் பயன்படலாம். எனினும், இவை மூளையில் கடுமையான இரத்தப்போக்கினை ஏற்படுத்தலாம். 5701 பங்கேற்பாளர்கள் கொண்டு நடத்தப்பட்ட 8 ஆய்வுகள் அடங்கிய இந்த புதுப்பிக்கப்பட்ட திறனாய்வில் இருந்து பெறப்பட்ட ஆதாரம் இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு வழக்கமான சிகிச்சை முறையாக பைபிரினாக்கி குறைப்பு செய்யும் காரணிகளைப் பரிந்துரைக்க இயலாது என்று கூறுகிறது. இதற்கு குறிப்பிடத்தக்க அளவில் பயன் உள்ளதா என்று சரியாக உறுதி செய்ய மேலும் பல ஆய்வுகள் தேவை. மேலும் அவ்வாறு குறிப்பிடத்தக்க அளவில் பயன் உள்ளது எனில் அது எவ்வாறான நோயாளிகளுக்கு அதிக பயன் அளிக்கும்வாய்ப்பு உள்ளது என்று அறிதல் வேண்டும்.
மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு