காரணம் அறியா கருவுறாமைக்கு (Subfertility) பெண்களுக்கு கலோமிபீன் சிட்ரேட் (Clomiphene citrate)

கலோமிபீன் சிட்ரேட் (Clomiphene citrate) கருவுறுதலுக்கு அளிக்கப்படும் ஒரு மருந்து. இது கருத்தரித்தலுக்கு தேவையான முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். முறையாக கருமுட்டை வெளிப்படுதல் ஆகாத பெண்கள் மற்றும் முறையாக கருமுட்டை வெளிப்படுதல் ஆகியும் கருவுறாத சில பெண்கள் கருத்தரிக்க இதனை பயன்படுத்துக்கிறார்கள். முறையாக கருமுட்டை வெளிப்படுதல் ஆகும் பெண்கள், ஒருவருடத்துக்கு மேலாக பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டும் கருத்தரிக்காமல் இருந்தால் கலோமிபீன் சிட்ரேட் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிப்பதாக தோன்றவில்லை .எனவே அவர்கள் கர்ப்பம் தரிக்க இயலாதவர்கள் (subfertile) என்று கருதப்படுகின்றனர் . கலோமிபீன் சிட்ரேட் (Clomiphene citrate) சிகிச்சை எடுபவர்களுக்கு 10% பல்பிறவிச்சூல் (multiple pregnancy) ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. பல்வேறான முரண் கூறுகளைக் கொண்ட ஆராய்ச்சிகளில் இருந்து இந்த திறனாய்வின் முடிவுகள் பெறப்பட்டதால், இந்த முடிவை எச்சரிக்கையுடன் செயல்படுத்த வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு.

Tools
Information