கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனையில் படுக்கை ஓய்வு எடுப்பது பிறக்கபோகும் குழந்தையின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் என்பதற்கு சிறிய அளவிலேயே ஆதாரங்கள் உள்ளது
மிக குறைந்த அளவிலான ஊட்டச்சத்துக்களை பெறும் கருவில் உள்ள குழந்தை வழக்கத்தை விட மிகவும் மெதுவாக வளர நேரிடும் (குன்றிய கரு வளர்ச்சி). தாயின் குறைவான உடல் செயல்பாடு குழந்தைக்கு அதிகமான ஊட்டசத்து கிடைக்க உதவலாம் என்ற எண்ணத்தில் இதுபோன்ற குழந்தைகளின் தாய்மார்களுக்கு படுக்கை ஓய்வு சில நேரங்களில் பரிந்துரை செய்யப்படுகிறது. எனினும், படுக்கை ஓய்வு இடைஞ்சல் அளிக்ககூடும் மற்றும் தாய்க்கு இரத்தம் உறைதல் ஆபத்துஅதிகரிப்பது குறித்த கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 107 பெண்கள் பங்குகொண்ட ஒரு ஆய்வு அடிப்படையில் செய்த இந்த திறனாய்வு . கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனையில் படுக்கை ஓய்வு எடுப்பதினால் பிறக்கபோகும் குழந்தையின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் என்பதற்கு சிறிய அளவிலேயே ஆதாரங்கள் உள்ளதாக கண்டறிந்துள்ளது. பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் மீது இதன் விளைவுத் திறனை அறிய மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.
மொழிபெயர்ப்பு: க.ஹரிஓம், வை. பிரகாஷ் மற்றம் சி.இ.பி.என்.அர் குழு