கடுமையான புறவழி மூளைக் காயத்திற்கு பாபிற்றுறேற்று (Barbiturate)

ஒருவருக்கு தலையில் காயமேற்பட்டால் அது மூளை வீக்கத்தை, ரத்த கசிவின் மூலமோ அல்லது இரத்தம் உறைதலின் மூலமோ அல்லது மூளை சுற்றியுள்ள திரவத்தின் சமசீரின்மையாலோ ஏற்படுத்துகிறது. மண்டையோட்டின் உள்ளே இடம் குறைவாக இருக்கிறபடியால், இது மூளையின் மீது அபாயகரமான அழுத்தத்தை உண்டாக்குகிறது (அதிகமான உள்மண்டை அழுத்தம்-ICP). அதிகமான உள்மண்டை அழுத்தத்தை குறைப்பதற்கு பொதுவாக அமைதிப்படுத்தும் பார்பிட்யுரேட்ஸ்களே (Barbiturates) மருந்தாக பயன்படுகிறது. அவை மூளையின் செயல்பாட்டை தாமதப்படுத்தி அதன் மூலம் திரவ உற்பத்தியை குறைக்கிறது.

341 பேர் கொண்ட 7 ஆய்வுகளில் இருந்து பொறப்பட்ட தரவுகள் இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டுள்ளது. பார்பிடியூரேட்ஸ் மரணத்தை குறைக்கம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் அவை உள்மண்டை அழுத்தத்தை குறைக்கலாம். பார்பிடியூரேட்ஸ், நான்கில் ஒருவருக்கு மேலும் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட காரணமாக இருக்கலாம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு.

Tools
Information